பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றபோது பிரபல நடிகை வனிதா விஜயகுமாருக்கு தமிழ் திரையுலகில் புதிதாக அறிமுகம் தேவையில்லை. தளபதி விஜயன் சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா, ஓர் இரு படங்கள் நடித்து அதன் பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
பிரபல நடிகர் ஆகாஷை கடந்த 2000வது ஆண்டு திருமண செய்த வனிதா 2007ம் ஆண்டு சில காரணங்களால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ஆனந்த் ஜெயராஜன் என்பவரை அதே 2007ம் ஆண்டு திருமணம் செய்து அதன் பிறகு 2012ம் ஆண்டு விவாகரத்தும் செய்தார்.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ன் மூலம் வேற லெவலில் வைரலானார் வனிதா விஜயகுமார் என்றால் அது மிகையல்ல. அதனைத்தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை மணந்து வெகுசீக்கிரத்தில் விவாகரத்தும் செய்தார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் தனக்கு சரியான அங்கீகாரம் தரப்படவில்லை என்று கூறி அந்த நிகழ்ச்சியிலிருந்து விளக்கினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வனிதா ‘விஜய் தொலைக்காட்சியுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும். மாறாக அந்த நிகழ்ச்சியில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் விலக்கியதாகவும் அவர் கூறினார். மாதர் சங்கங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘நெத்தியில் குங்குமம் வைத்தாலே யாரு புருஷன்னு கேக்குறாங்க என்று கூறிய அவர், மாதர் சங்கங்கள் எந்த மாதருக்கும் நீதிபெற்று தருவதில்லை என்றும். பல முறை தெருவில் தனியாக நின்ற தனக்கு எந்த மாதர்சங்கமும் உதவவில்லை என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய வனிதா செய்தியாளர்களை பார்த்து ‘கேள்வி கேட்பது உங்களுக்கு பிசினெஸ், அதே போல நான் இங்கு நின்று பதில் சொல்வது எனக்கு பிசினெஸ்’ ஆகையால் இருவருக்கும் இடையில் ஒரு சிறந்த புரிதல் வேண்டும். அப்படி இல்லை என்றால் அது சரிவராது. அதேபோலத்தான் அந்த நிகழ்ச்சியிலும் நடந்தது அதனால் விலகிக்கொண்டேன் என்றார்.
வனிதா தற்போது பிரசாந்தின் அந்தாகன் உள்பட மூன்று படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.