TamilSaaga

சிங்கப்பூரில் Work Pass வைத்திருப்பவர்களுக்கு புதிய Update.. இன்று (ஜூலை 1) முதல் சிங்கையில் அமலாகும் சில “புதிய விதிகள்” – ஒரு Complete Report

சிங்கப்பூரில் இன்று ஜூலை 1 முதல், சில பெருந்தொற்று பராமரிப்புகளுக்காண கட்டணங்கள் உயரும், ஓய்வுபெறும் வயது 63 ஆக மாற்றப்படுகிறது. மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கான இடங்கள் இனி குறைவாக இருக்கும்.

மேலும் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் சில புதிய விதிகள் அமலாகியுள்ளன. அவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

புகைபிடிக்க தடை..

சிங்கப்பூரில் புகைபிடித்தல் தடையானது இன்று முதல் அனைத்து பொது பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள், 10 பொழுதுபோக்கு கடற்கரைகள் மற்றும் தேசிய நீர் நிறுவனமான PUB மூலம் நடத்தப்படும் beautiful and clean waters என்ற திட்டத்தின் கீழ் வரும் இடங்களில் புகை பிடிக்க இனி அனுமதி இல்லை.

வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள்..

மேலும் தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் ஒர்க் பாஸ் (Work Pass) வைத்திருப்பவர்கள், தங்களுடைய வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை இனி இங்கு வைத்திருக்கவும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அப்படி இங்கு பயன்படுத்தும் பட்சத்தில் அவர்கள் தங்கள் வாகனங்கள் சிங்கப்பூருக்கு வெளியே தினமும் ஆறு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும், இது எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பு இருந்த கொள்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெரும் வயது..

மேலும் இனி சிங்கப்பூரை பொறுத்தவரை ஓய்வு பெறும் வயது 63 ஆகவும், மீண்டும் பணியில் சேரும் வயது 68 ஆகவும் உயர்த்தப்படுகிறது. சிங்கப்பூர் தொழிலாளர்களின் ஓய்வு மற்றும் மறுவேலைவாய்ப்பு வயதை 65 மற்றும் 70 ஆக படிப்படியாக உயர்த்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது உள்ளது.

Related posts