சிங்கப்பூரில் பள்ளிகளில் அனைத்து தனிப்பட்ட இணை-பாடத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசியமற்ற செறிவூட்டல் பாடங்கள் மறுதேதி அறிவிக்கப்படாமல் நிறுத்தப்படுகிறது என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உடற்கல்வி வகுப்புகளுக்கு பள்ளிகள், வெளிப்புற அல்லது நன்கு காற்றோட்டமான இடங்களில் நடத்தவேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“மாணவர்களின் கற்றல் மீதான தாக்கத்தைக் குறைக்க, பள்ளிகள் (சிறப்பு கல்விப் பள்ளிகள் மற்றும் MOE மழலையர் பள்ளி உட்பட) மற்றும் உயர் கற்றல் நிறுவனங்கள் திறந்த நிலையில் இருக்கும், ஆனால் கோவிட் -19 பரவல் அபாயத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை கடுமையாக்கப்படும் MOE தெரிவித்துள்ளது.
CCAகள் மற்றும் உடற்கல்வி வகுப்புகள் குறித்த கடுமையான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நடக்கும், அதேசமயம் வெளிப்புற CCAகள் மற்றும் கற்றல் பயணங்கள் போன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும்.