சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய உயர் கமிஷன் தற்போது புதிய ஆன்லைன் சேவை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சேவையின் வாயிலாக பல APPOINTMENT சேவைகளை வீட்டில் இருந்தபடியே மக்கள் புக் செய்யலாம் என்று சிங்கப்பூரில் செயல்படுகின்ற இந்திய உயர் கமிஷன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கென்று https://hcisingapore.gov.in/appointmenthome என்ற இணைய முகவரியையும் இந்திய உயர் கமிஷன் வெளியிட்டுள்ளது. மேலும் இன்று முதலே இந்த சேவைகளை மக்கள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவை மூலம் “தேவைப்படும் சேவைக்கு ஏற்ப சந்திப்பை பதிவு செய்யலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் தூதரக சேவைகளை நாடுகிறீர்கள் என்றால், தூதரக சேவைகளுக்கு மட்டுமே சந்திப்பை பதிவு செய்யவேண்டும். தூதரக சேவைகளைப் பெற வேறு ஏதேனும் சந்திப்பை (அதாவது, விசா / பாஸ்போர்ட்) முன்பதிவு செய்தல் போன்ற சேவை வழங்கப்படாது, அதற்கென்று நீங்கள் புதிய சந்திப்பை பதிவு செய்ய வேண்டும்.
பல விதமான சேவைகளுக்கு இந்த இணையதளம் மூலம் மக்கள் முன்பதிவு செய்யலாம். மேலும் எந்தெந்த சேவைகளுக்கு Appointment பதிவு செய்யலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.