TamilSaaga

‘விரைவில் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பணிப்பெண்கள்’ – எந்த நாட்டிற்கு முன்னுரிமை தெரியுமா?

சிங்கப்பூரில் இந்த ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கும் புதிய திட்டத்தின் மூலம் இந்த பெருந்தொற்று சூழலின் மத்தியில் அதிக அளவிலான பணிப்பெண்கள் விரைவில் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு முகவர் சங்கம் மற்றும் ஒரு சில வேலைவாய்ப்பு முகவர் தலைமையிலான இந்த திட்டம், முதலில் இந்தோனேசியா மற்றும் பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண்களை இங்கு வர அனுமதிக்கும்.

மேலும் அந்த பணிப்பெண்கள் தங்கள் நாடுகளில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வருவதற்கு முன்பாக 14 நாட்கள் கால அவகாசத்தில் சில முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்குமென்றும் சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த பணிப்பெண்கள் சிங்கப்பூர் வந்தவுடன், நடைமுறையில் இருக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், இதில் 14 நாள் தனிமைப்படுத்துதல், COVID-19 சோதனை நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

இந்த திட்டத்தின் மூலம் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் வெளிநாட்டு சோதனை மற்றும் பணிப்பெண்களின் போர்ட்போர்டிங் செலவுகளை ஈடுகட்ட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts