TamilSaaga

சிங்கப்பூர் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான “புதிய On-Boarding மையம்” : என்னென்ன வசதிகள் இருக்கு? – முழு விவரம்

சிங்கப்பூரின் செங்காங் வெஸ்டில் உள்ள எங்களின் ஆறாவது புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆன்போர்டிங் மையம் (MWOC) இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது இவ்வகை மையங்களின் மொத்த கொள்ளளவை தற்போது 12,000 படுக்கை இடங்களாகக் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் இறந்த தொழிலாளி குமரவேல் ராஜா – திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தினம் ஒரு ஊழியரின் “பிணம்”

MWOC என்பது ஒரு One Stop Onboarding Stop மையமாகும், இது வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள் தங்கள் SHN எனப்படும் Stay Home Notice காலத்தை செலவிட மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை மற்றும் Settling In Programme (SIP) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

MWOC Eunos, 10A யூனோஸ் சாலை 1, சிங்கப்பூர் 408523
MWOC Punggol, 501A புங்கோல் வே, சிங்கப்பூர் 828646
MWOC தெங்கா, 1A தெங்கா சாலை, சிங்கப்பூர் 698813
மற்றும் 3A தெங்கா சாலை, சிங்கப்பூர் 698814
MWOC சோவா சூ காங்
10A லோரோங் பிஸ்தாரி, சிங்கப்பூர் 688186
MWOC செங்காங் மேற்கு
20A Seletar West Road 1, சிங்கப்பூர் 798991

மேற்குறிப்பிட்ட இந்த இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றது, ஏற்கனவே 5 இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 6வதாக புதிய மையம் ஒன்று தற்போது திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்.

SHN பிரத்யேக வசதி,
வெளிநாட்டு தடுப்பூசி சரிபார்ப்புக்கான செரோலஜி சோதனை,
மேம்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள்,
SIP எனப்படும் செட்டில்-இன் திட்டம்
Trace Together டோக்கன் வழங்குதல்,
Punggol பகுதியில் உள்ள மையத்தில் மட்டும் பணி அனுமதி அட்டை பதிவுக்கான பயோமெட்ரிக் பதிவு உள்ளது

இதையும் படியுங்கள் : New Year 2022 Exclusive: தேக்காவில் ஹோட்டல் வைத்துள்ள தமிழர் – வரிசையில் நின்று உணவு வாங்கும் சிங்கப்பூர் போலீஸார்

மேற்குறிப்பிட்ட சேவைகள் இந்த மையங்களில் வழங்கப்படும்.

குறிப்பு : VTL மூலம் சிங்கப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் முதலாளிகள் தங்கள் 5-நாள் ஆன்போர்டிங் திட்டத்திற்குப் பிறகு செட்டில்-இன் திட்டம் (SIP) மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு சுய-ஏற்பாடு செய்ய வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts