சிங்கப்பூரில் மீண்டும் நேற்று வெளியான கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மேலும் ஒருவர் இருந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 63 வயதுடைய சிங்கப்பூரை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கை 67716 என குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த நபர் கடந்த ஆகஸ்ட்.5 அன்று உயிரிழந்துள்ளார். அவர் தடுப்பூசியை போடாதவர் என்றும் கூடுதல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் அந்த நபருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் உடல்நலம் மிகவும் முடியாத சூழலில் Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்பு அவர் இறப்பிற்கு பிறகு கொவிட் 19 தொற்றால் இறந்தார் என MOH தெரிவித்துள்ளது.
அவருக்கு ஏற்கனவே இதயநோய், ஸ்ட்ரோக், சர்க்கரை வியாதி, உயர் அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா போன்ற உடல் உபாதைகள் இருந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் சிங்கப்பூரில் கோரோனாவால் உயிரிழக்கும் 4வது நபராவார்.