சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மதியம் நிலவரப்படி உள்நாட்டில் 136 பேருக்கு புதிதாக பெருந்தொற்று கண்டறியப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ஜுராங் ஃபிஷர் போர்ட் / ஹாங் லிம் சந்தை மற்றும் உணவு மையக் கிளஸ்டருடன் 902 வழக்குகள் இனம்காணப்பட்டுள்ளன. இது நாட்டில் தற்போது உள்ள மிகப்பெரிய நோய் தொற்று குழுமமாக உள்ளது.
புதிய வழக்குகளில், 59 வழக்குகள் முந்தைய வழக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு சோதனை மூலம் இருபத்தி இரண்டு வழக்குகள் கண்டறியப்பட்டன. மீதமுள்ள 55 நோய்த்தொற்றுகள் தற்போது முந்தைய நிகழ்வுகளுடன் இணைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் வசித்து வரும் மண்டாய் எஸ்டேட்டில் அமைந்துள்ள westlite juniper தங்குமிடத்தில் 8 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த ஜூன் 24 அன்று ஹார்வெஸ்ட் உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில் உள்ள நோய் குழுமத்தில் இருந்த அனைவரும் குணமடைந்த நிலையில் சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் தங்குமிடத்தில் பதிவாகும் முதல் தொற்று குழுமம் இது.
சிங்கப்பூரில் தற்போது மொத்தம் 39 தொற்று குழுமங்கள் உள்ளன, அவைகளில் மூன்று முதல் 902 நோய்த்தொற்றுகள் வரை உள்ளன.