பொது போக்குவரத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. கார் போன்ற தனி போக்குவரத்துகள் விலையுயர்ந்தது என்பதால் இங்கு பெரும்பாலும் மக்கள் பொது போக்குவரத்துகளையே பயன்படுத்துகின்றனர்.
அதற்க்கு தகுந்தாற்போல் இங்கு பல பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நாடு முழுவதும் சிறந்த இணைப்பை வழங்கி வருகிறது. அதனை மேலும் சிறப்பாக மாற்ற தற்பொழுது ஒரு புதிய Interchange அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இங்கிருந்து புதிய ரூட் மூலம் பல இடங்களுக்கு எளிதான இணைப்பை வழங்க முடியும் என்பதே போக்குவரத்து துறையின் முயற்சி.
Tengah பகுதியில் தான் இந்த Interchange அமைக்கப்பட்டுள்ளது. விசாலமான அமைப்பு, தடைகளற்ற நுழைவு, ஓய்வு எடுப்பதற்கான பகுதி, கழிவறைகள் போன்ற வசதிகளை இந்த நிலையம் கொண்டுள்ளது.
Tengah பகுதியின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவு அங்காடி-யின் முன்புறம் இது அமைக்கப்பட்டுள்ளது. இது தான் Tengah பகுதியில் திறக்கப்பட்டுள்ள முதல் சூப்பர் மார்க்கெட் ஆகும். Plantation Plaza-வில் இது அமைந்துள்ளது. கடந்த ஜூன் 28 முதல் இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இங்கிருந்து மற்ற பகுதிகளை இணைக்கும் விதமாக மூன்று எண்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
- பேருந்து எண்- 271 – Tengah வில் இருந்து Bukit Batok West, Bukit Gombak and Beauty World போன்ற பகுதிகள் வழியே இயக்கப்படும். இந்த வழித்தடம் Bukit Gombak ரயில்நிலையத்தின் North-South Line மற்றும் Beauty World station-ல் உள்ள Downtown Line போன்ற இடங்களுக்கு சிறந்த இணைப்பை வழங்கும். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய இடங்களான Bukit Gombak, Bukit Batok மற்றும் Bukit Gombak ஸ்டேடியம் போன்றவற்றிற்கும் இந்த பேருந்து மூலம் எளிதில் சென்று வரலாம்.
- பேருந்து எண்- 992 – இந்த பேருந்தின் வழித்தடமானது Ply Tengah Garden Walk, Tengah Drive and Tengah Boulevard போன்ற இடங்களுக்கு சென்ற பின்னர் Tengah Interchange-ஐ வந்தடையும் விதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- பேருந்து எண்- 870 – இந்த பேருந்து கடந்த ஆண்டிலிருந்து Tengah பகுதிக்கு இயக்கப்படுகிறது. இதன் வழித்தடமும் மாற்றப்பட்டு Tengah Boulevard வழியாக Tengah Interchange-ஐ வந்தடையும்.
இந்த Interchange-ஆனது சிங்கப்பூரின் Tower Transit-ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கப் போகிறது. ஜூலை 21 முதல் இந்த பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என LTA (Land Transport Authority) அறிவித்துள்ளது.