சிங்கப்பூரில் ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் டெலிவரி தொழிலாளர்களுக்கு அடிப்படை வேலை பாதுகாப்பு இல்லாதது வளர்ந்து வரும் பிரச்சனையாகும், மேலும் இந்த தொழிலாளர்களுக்கு எப்படி பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குவது என்பதை மனிதவள அமைச்சகம் (MOM) ஆய்வு செய்து வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தேசிய தின பேரணி உரையில் கூறினார்.
சிங்கப்பூரில் கடுமையாக பெருந்தொற்று பரவல் இருந்த காலத்தில் கடுமையாக உழைத்த இந்த குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் குழு குறித்து “அக்கறை” கொண்டிருப்பதாகவும், ஆனால் மிதமான வருமானத்தை அவர்கள் ஈட்டுவதாகவும் அவர் கூறினார். கிராப், ஃபுட்பாண்டா மற்றும் டெலிவேரூ போன்ற கிக்-பொருளாதார நிறுவனங்கள் இந்த தொழிலாளர்களுக்கு எந்த வேலைகள் ஒதுக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன, மேலும் அவர்களின் செயல்திறனையும் நிர்வகிக்கின்றன என்றார் அவர்.
அதே சமயம் தொழிலாளர்கள் தங்கள் ஆர்டர்களை மெதுவாக வழங்கியதற்காக அபராதம் விதிக்கப்படுகின்றனர். மேலும் சில மீறல்கள் காரணமாக இடைநீக்கம் செய்யப்படுகின்றனர் என்று பிரதமர் கூறினார். ஆயினும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் இல்லாததால், பணியாளர்கள் காக்கும் இழப்பீடு, தொழிற்சங்க பிரதிநிதித்துவம் மற்றும் முதலாளி மத்திய வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு போன்ற அடிப்படை பாதுகாப்புக்கு அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.
விநியோக ஊழியர்கள் பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் கூறினார். உதாரணமாக, மோசமான வானிலை, மோட்டார் சைக்கிள் செயலிழப்பு மற்றும் பயமுறுத்தும் நாய்கள் காரணமாக அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றார்.
ஆகையால் அவர்களின் நலன் குறித்து MOM ஆய்வு செய்து வருவதாக நேற்றைய உரையில் பிரதமர் லீ தெரிவித்தார்.