TamilSaaga

பார்வையாளர்களை கவரும் பறக்கும் சேவல் – பாசிர் ரீஸ் பகுதியில் ஆச்சர்யம்

சேவல்கள் பொதுகாக பறவை இனத்தை சேர்ந்தாலும் அவை சிறிய உயரமோ தூரமோ மட்டுமே பறப்பதை தான் நாம் பார்த்திருப்போம்.

சிங்கப்பூர் பாசிர் ரீஸ் வட்டாரத்தில் ஆட்ரியன் டான் (Adrian Tan) என்பவர் கடந்த புதன்கிழமை (ஜீன்.16) எடுத்த ஒரு பறக்கும் சேவலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

வானில் மற்ற உயரப் பறக்கும் பறவைகளை போலவே பறந்து சென்று ஆறு ஒன்றை கடக்கும் பறக்கும் சேவல் புகைப்படத்தை அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிவதால் இது போன்ற புகைப்படங்கள் எடுப்பதை பொழுதுபோக்காக செய்வதாக திரு.ஆட்ரியன் டான் அவர்கள் கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் சேவல் வளர்ப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் தெற்கு மாநிலங்களில் சேவல்களை வளர்த்து அவற்றை சண்டையிடச் செய்யும் சேவல் சண்டை மிகவும் பிரபலமானது. பறப்பது மட்டுமல்லாமல் மிகுந்த வீரியத்துட்டன் சேவல்கள் மோதும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது.

நன்றி : Photo Credits – Mr.Adrian Tan / Facebook

Related posts