தேசிய ஹாக்கி வீராங்கனை ஒருவர் இன ரீதியான மொழியைப் பயன்படுத்தியதற்கு விசாரணை நடத்த வேண்டும் என மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோஹ் மலேசிய தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி 28ந் தேதி நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் கச்சேரியில் இருந்து பார்வையாளர்கள் நிரம்பி இருந்த இன்ஸ்டாகிராம் வீடியோ ட்ரெண்ட் ஆனது. அதில் மலேசிய தேசிய ஹாக்கி வீரர் ஹனிஸ் ஆன், இனவெறி கமெண்ட்டினை அடித்திருந்தார்.
26 வயதான அவர் மலேசியாவின் சிறந்த வீராங்கனையாக பாராட்டப்படுபவர். இளசுகளிடம் பிரபலமாக இருக்கும் அவர் தான் தற்போது சர்ச்சைக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.
இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் புக்கிட் ஜலீல் மைதானத்தில் இசை கச்சேரியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வற்றாத நதியே காஞ்சி போய்ட்டா? சிங்கப்பூரின் MOM வெப்சைட் மீதே கை வைத்த தில்லாலங்கடி கும்பல்… விசா செக் செய்ய போற முன்னாடி இத செக் பண்ணிக்கோங்கோ!
அந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் அடித்தது. அரங்கமே நிரம்பி இருக்கும் பார்வையாளர்களை காட்டி இருந்தது. அந்த வீடியோவில் ஹன்ஸ், தன்னுடைய மொழியில் அங்குள்ள பார்வையாளர்களின் உடல் துர்நாற்றம் தாம் மிகச் சிறந்ததாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மலேசிய இந்தியர்களுக்கு உடல் துர்நாற்றம் இருக்கிறது என்ற இனவெறி கொண்ட கமெண்ட்டாக இணையம் அவரை விமர்சிக்க தொடங்கியது.
ஹனிஸ் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு தனது இன்ஸ்டாகிராம் கணக்கை privateஆக மாற்றியுள்ளார். இந்த கமெண்ட் பிழை. மிகவும் கவலை தரும் விஷயமாக மாறி இருக்கிறது. தனது 10 வருட ஹாக்கி வாழ்க்கை முழுவதும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த நண்பர்களால் உருவாக்கப்பட்டதாக ஹன்ஸ் கூறினார்.
ஜனவரி 31 அன்று செய்தியாளர் சந்திப்பின் முடிவில் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவிடம் கருத்து கேட்கப்பட்டது.
சேஸின் கூற்றுப்படி, கமெண்ட் குறித்து விசாரணை நடத்த தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு அறிவுறுத்தியதாக யோஹ் கூறினார். கவுன்சில் மற்றும் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இந்த விஷயத்தைப் பின்னர் விவாதிக்கும் என்றும் அவர் கூறினார். மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழுவை ஹனிஸ் எதிர்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மேளன தலைவர் சுபஹான் கமல் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம், அமைச்சர் கூறியது போல், விளையாட்டுகளில் இனவெறிக்கு இடமில்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.