கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய நாட்களில் எம்ஆர்பி சேவை நேரத்தை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது எனவே டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தேவாலயங்கள் மற்றும் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு ஏற்றார் போல இந்த இரண்டு நாள் இரவிலும் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை இரவு 12 மணிக்கு பிறகும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது இதனை ஒட்டி எம் ஆர் டி லைனில் வடக்கு-தெற்கு, கிழக்கு- மேற்கு, வட்டப்பாதை, தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய ரயில் பாதைகளில் சேவை நேரம் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கெட் பஞ்சாங் வழியாகச் செல்லும் ரயில் சேவை மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு செல்லும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து சேவையை பொறுத்தவரை சுவாசூ காங் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சேவைகளான 300, 301, 302, 307, 983A போன்றவற்றின் நேரமும் உட்லேண்ட் போக்குவரத்து மையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளான 901, 911, 912A, 912B, 913 போன்ற பேருந்துகளின் சேவைகளும் புக்கெட் பஞ்சாங்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் 90 972 973A ஆகிய பேருந்துகளின் சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தகவல்களை அடைய எஸ் எம் ஆர் டி நிறுவனத்தின் இணையதளத்தை பார்வையிடலாம் எனவும், 18003368900 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மேற்கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.