TamilSaaga

“சின் மிங் சாலையில் உள்ள காபிஷாப்” – சிங்கப்பூரில் உருவான இரண்டு புதிய கிளஸ்ட்டர்

சிங்கப்பூரில் நேற்று ஆகஸ்ட் 7ம் தேதி சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் செயல்பாட்டில் உள்ள பெருந்தொற்று கிளஸ்டர்களின் பட்டியலில் இரண்டு புதிய பெருந்தொற்று கிளஸ்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கிளஸ்டர்களில் ஒன்று சின் மிங் 23 காபி ஷாப் ஆகும், இது பிளாக் 23, சின் மிங் சாலையில் அமைந்துள்ளது, இதில் ஐந்து வழக்குகள் தற்போது உள்ளன.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) நண்பகல் 12 மணி நிலவரப்படி 81 புதிய பெருந்தொற்றுகளை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதி செய்தது. இது சிங்கப்பூரில் பதிவான மொத்த பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை 65,686 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் சிங்கப்பூரில் நேற்று 80 வயது மூதாட்டி ஒருவர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

நேற்று பதிவான 81 புதிய வழக்குகளில் 75 புதிய உள்ளூர் வழக்குகள் வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகளில், 50 முந்தைய வழக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வழக்குகளில் 70 வயதுக்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் மற்றும் கடுமையான நோய் அபாயத்தில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts