TamilSaaga

சிங்கப்பூரில் இந்தோனேசிய பணிப்பெண் மீது வழக்கு பதிவு : “முதியவருக்கு நேர்ந்த அவமானம்” – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒரு வயதான நபரை குளிக்கவைக்கும் வீடியோவை அந்த நபரின் அனுமதி இல்லாமல் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய பணிப்பெண் மீது இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 14) மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அந்த 33 வயதான இந்தோனேசி பணிப்பெண் பாதிக்கப்பட்ட நபரின் சம்பந்தப்பட்ட கிளிப்களை பதிவு செய்ததாக ஏழு குற்றச்சாட்டுகள் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புங்கோல் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்த குற்றங்களை அவர் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கேக் உத்தரவு காரணமாக அந்த பணிப்பெண்ணின் பெரியரை நீதிமன்றம் வெளியிடவில்லை. கடந்த ஜனவரி 2020 மற்றும் இந்த ஆண்டுக்கு இடையில் ஏழு முறை அவரை குளிப்பாட்டிய போது அந்த பெண் தனது மொபைல் போனை அந்த வீடியோவை பதிவு செய்ய பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த நபருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கிளிப்களை மற்றொரு தரப்பினருடன் வாட்ஸ்அப் வழியாக குறைந்தது நான்கு முறை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த மனிதனின் வயது மற்றும் உடல் நிலை பற்றிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி, பணிப்பெண் தனது அனுமதியின்றி கிளிப்களில் ஒன்றை சமூக ஊடக தளமான டிக்டோக்கில் பதிவேற்றினார்.

முதியவர் ஒருவர் குளிப்பது போன்ற வீடியோக்களை பதிவு செய்ததாகக் கூறப்படும் பெண்ணைப் பற்றி இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு புகார் கிடைத்ததாகவும். இதுபோன்ற ஒரு கிளிப்பை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகவும் காவல்துறை முந்தைய அறிக்கையில் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது ஜாமீன் 15,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டது மற்றும் இந்த வழக்கு அக்டோபர் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts