TamilSaaga

ஒரே வண்டியில் 13 பேர்?.. ஆபத்தான முறையில் அழைத்து செல்லப்பட்டும் “சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள்” – விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்கு என்பது மிகவும் பெரியது என்றால் அது சற்றும் மிகையல்ல எனலாம். சிங்கப்பூர் அரசும் தங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் dormitoryகளில் இருந்து வேலையிடங்களுக்கு லாரிகளில் அழைத்துச்செல்லப்படுவது வாடிக்கையான ஒன்றாகத் தான் இன்றளவும் உள்ளது. நாடு பல முன்னேற்றங்கள் அடைந்துவிட்டபோதிலும் பல நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல சிறிய ரக லாரிகளை பயன்படுத்தி வருகின்றது.

தொழிலாளர்கள் அப்படி செல்லும்போது மழை, வெயில் மற்றும் புழுதி ஆகிவற்றால் பெரும் அவஸ்தைக்கு அவர்கள் உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் பாதுகாப்பு இன்றி லாரிகளில் பயணம் செல்லும்போது மரணங்களும் நிகழ்கின்றன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் PIE சாலையில் நடந்த விபத்து ஒன்றில் முறையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டததால் ஒரு இந்திய தொழிலாளர் உள்பட இருவர் இறந்தது நினைவுகூரத்தக்கது.

தவறாக நடந்துகொண்டதால் திட்டினாரா வெளிநாட்டு பணிப்பெண்?.. நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த முதியவர் – எப்படி இறந்தார்? சிங்கப்பூர் Magistrate விளக்கம்

இந்நிலையில் Sg Road Vigilante என்ற முகநூல் பக்கத்தில் வெளியான ஒரு புகைப்படம் நம்மை மேலும் கலங்கடித்துள்ளது என்று தான் கூறவேண்டும். சிறிய ரக லாரியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கோழிகளை அடைப்பதைப்போல அடைக்கப்பட்டு அழைத்து செல்லப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

SAFETY REGULATIONS FOR LORRIES CARRYING WORKERS

2012ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு பணியாளர்களை மினி லாரியில் அழைத்து செல்வது குறித்து வெளியிட்ட அதிகபுர்வ தகவல்கள் மேலே உள்ள லிங்கில் உள்ளது.

“சாலை விதிகளை மீறிவிட்டாய்.. லஞ்ச பணத்தை யாருக்கும் தெறியாமல் எங்க காரில் போடு” – சிங்கப்பூரரை மிரட்டய மலேசிய போலீஸ்? – வெளியான வீடியோ

அதன்படி வண்டியில் நீளத்திற்கு ஏற்ப மட்டுமே பணியாளர்களை அதில் ஏற்றி செல்லவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தில் தொழிலாளர்களின் கைகள் வண்டிக்கு வெளியே நீளும் அளவிற்கு அவர்கள் அதிக அளவில் நெருக்கமாக அழைத்து செல்லப்படுவது தெரியவந்துள்ளது. உதாரணமாக 6 பேர் பயணிக்கும் வண்டியில் Seat Belt கூட இல்லாமல் 13 பேர் அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வெகு சில நிறுவனங்களே இதைப்போன்ற தவறுகளை செய்வதால் நிச்சயம் MOM மற்றும் LTA அதிகாரிகள் தயவுகூர்ந்து இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts