சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நேற்றைய தினம் சோகமாக நாளாக அமைந்துள்ளது.
சிங்கப்பூரின் பிரபல Rotary IMC Pte Ltd நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளி தாமஸ் நேற்று (ஜன.29) உயிரிழந்தார்.

சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3.00 மணியளவில் திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதன் காரணமாக அகால மரணமடைந்தார்.

இவர் கடந்த 10 வருடங்களாக சிங்கப்பூரில் டிரைவாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் தான் நேற்று அதிகாலை தாமஸுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இளம் வயதிலேயே நெஞ்சு வலி காரணமாக தாமஸ் உயிரிழந்திருப்பது, சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.