TamilSaaga

“எதிர்வரும் இரண்டு வாரங்கள்” – சிங்கப்பூரின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது 2021ம் ஆண்டின் இந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் அதிக அளவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் நேற்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) அன்று தெரிவித்தது. வரவிருக்கும் இரண்டு வாரங்களில், தென்மேற்கில் இருந்து குறைந்த அளவில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், சிங்கப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பூமத்திய ரேகைக்கு அருகில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், பூமத்திய ரேகை தென்கிழக்கு ஆசியா பகுதியில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில்பெரும்பாலான நாட்களில், தீவின் சில பகுதிகளில் அதிகாலை மற்றும் பிற்பகலுக்கு இடையே இடியுடன் கூடிய மழை பெய்யும்.

“சிங்கப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் அளவும் அதிக அளவில் இருப்பதால் நிலப்பகுதிகளில் பகல் நேர வெப்பம் வலுவாக இருக்கிறது” இதனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“பெரும்பாலான நாட்களில், தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது” என்று MET தெரிவித்துள்ளது.

Related posts