TamilSaaga

சிங்கப்பூர்.. கழுத்தில் கேபிள் சிக்கிய பரிதாப நிலையில் “ராட்சச பல்லி” : குப்பைகளால் இந்த அவல நிலையா?

கழுத்தில் கேபிள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்த ஒரு ராட்சச பல்லியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. Facebook பயனர் Loke Peng Fai என்பவர் கடந்த ஜனவரி 16 அன்று காலை Sungei Buloh Wetland Reserveல் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து படங்களைப் பார்த்தபோதுதான் அதன் அவலநிலையை அவர் உணர்ந்துள்ளார். “Singapore Wild life Sightings” என்ற பிரபல முகநூல் குழுவில் அந்த படத்தைப் பகிர்ந்துள்ள Loke, அவர் அந்த புகைப்படத்தை எடுத்த பிறகு அந்த ராட்சச பல்லி தண்ணீருக்குள் ஓடி மறைந்ததாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் விமான நிலையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு” : முன் அனுபவம் முக்கியம் – கல்வித்தகுதி வேண்டுமா?

முகநூலில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில் அந்த ராட்சச பல்லி அதன் வாயில் ஒரு பெரிய மீனுடன் காணப்பட்டது. மேலும் அதன் கழுத்தில் ஒரு கருப்பு கேபிள் கட்டப்பட்டிருந்தது, கண்கள் முடிய நிலையில் அதன் முகத்தில் ஈக்கள் இருந்ததையும் அந்த புகைப்படத்தில் காணமுடிந்தது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியத்தின் (NParks) தன்னார்வத் தொண்டராக இருந்த பெர்னார்ட் சீ, Lokeன் பதிவை கண்ட பிறகு, Sungei Buloh NParks குழுவை இந்த நிகழ்வு குறித்து எச்சரித்துள்ளார். மேலும் சுங்கே பூலோவில் பருவகால அடிப்படையில் ஈக்கள் திரளாகத் தோன்றுவதால், அவை கவலைக்குரியவை அல்ல என்றும் அவர் மதர்ஷிப்பிடம் கூறினார்.

அந்த ராட்சச பல்லி அதன் வாயில் வைத்திருக்கும் இரையைத் விழுங்கும் அளவிற்கு அதன் கழுத்தில் உள்ள அந்த கேபிள் தளர்வாகத்தான் உள்ளது என்பதும் அவர் கூறினார். NParks மற்றும் Acres போன்ற ஏஜென்சிகள் முன்பு இதுபோன்ற சூழ்நிலைகளில் தலையிட முயற்சித்தாலும், மானிட்டர் பல்லிகள் போன்ற விலங்குகளைப் பிடிப்பது எளிதான காரியமல்ல என்றார் அவர். மேலும் இது தனக்குத் தெரிந்த, கழுத்தில் இதுபோன்ற பிளாஸ்டிக் சிக்கிக்கொண்ட நான்காவது பல்லி என்று மதர்ஷிப்பிடம் சீஹ் கூறினார். அவர் ஒருமுறை ஒரு சிறிய மானிட்டர் பல்லியைக் கண்டபோது, அதன் கழுத்தில் தண்ணீர் பாட்டிலில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் வளையம் இருந்தது. அந்த மானிட்டர் பல்லி சில மாத குட்டியாக எனக்கு தோன்றியது என்றார்.

இதையும் படியுங்கள் : விமான பணிப்பெண்ணை பின்னால் தட்டிய சக ஊழியர்” : கடுப்பான பெண்ணிடம் கூலாக பதில் சொன்ன ஆசாமி

நீர்நாய்களுக்கான பணிக்குழுவில் அங்கம் வகிக்கும் சீ, சில மாதங்களுக்கு ஒருமுறை குப்பையில் சிக்கிய நீர்நாய் பற்றிய அறிக்கைகளையும் பெறுவதாக கூறினார். கடலோரப் பகுதிகளில் உள்ள கடல் குப்பைகள் பெரும்பாலும் சிங்கப்பூரில் இருந்து வருவதில்லை என்றாலும், “அடிப்படை என்னவென்றால் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே” என்று அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts