TamilSaaga

பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கு பயணம் : 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி அவசியமா? – முழு விவரம்

பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் நாட்டிற்கு 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் செல்வதற்கு தடுப்பூசி பெற வேண்டுமா? என்பது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் எழுகின்றன. இந்நிலையில் இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தினை தற்போது பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் பிரிட்டனில் எங்கு செல்கிறார்கள் என்பது குறித்து விதிமுறைகளில் சிறிய அளவு மாற்றங்கள் ஏற்படும் என்பதை மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.

பிரான்சில் இருந்து இங்கிலாந்து, வட அயர்லாந்து அல்லது அயர்லாந்து போன்ற எந்த நாடுகளுக்கு செல்கிறார்கள் என்பதை குறித்து அவர்களுக்கான பயணம் கட்டுப்பாடுகளும் மாறுபடுகிறது. இந்நிலையில் பிரான்சிலிருந்து பிரிட்டன் நாட்டிற்கு செல்பவர்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் அவர்கள் என்ன அத்தியாவசிய காரணத்திற்காக தற்பொழுது செல்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்யும் படிவத்தை அவர்கள் முதலில் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் அத்தியாவசிய காரணங்களுக்காக தடுப்பூசி பெற்றவர்களுடன் பிரிட்டன் நாட்டிற்கு பயணிக்கும் பொழுது அவர்களுடன் பயணிக்கும் 18 வயதுக்கு கீழே உள்ள நபர்களும் தடுப்பூசி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். மேலும் பிரான்சு நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு செல்லும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக UK Passenger Locator Form என்னும் படிவத்தை கட்டாயமாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

Related posts