சில சமயங்களில் சில விசித்திரமான செயல்களைச் செய்யும் காட்டு விலங்குகளை நாம் கண்டிருப்போம். அதைப்போலத் தான் விசித்திரமான ஒரு சம்பவத்தை சிங்கப்பூரில் படம்பிடித்துள்ளார் சிங்கப்பூரின் புகைப்படக் கலைஞர் வில்லியம் காவ். இரண்டு ஊர்வனவற்றுக்கு இடையே இதுபோன்ற ஒரு காட்சி படம்பிடிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 22, 2021 அன்று சிங்கப்பூர் Wildlife Sightings என்ற Facebook குழுவில் பகிர்ந்துள்ளார் அந்த கலைஞர்.
சிங்கப்பூரின் காவ் பாசிர் ரிஸ் பூங்காவில் ஒரு மானிட்டர் லிசார்ட் எனப்படும் ராட்சச பல்லி மற்றும் ஒரு வகை நாகப்பாம்பை அவர் கண்டார். அந்த இரண்டு ஊர்வன விலங்குகளும் தங்களுடைய பிளவுபட்ட நாக்குகளை தொட்டுக்கொள்ளும் கட்சியை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். பொதுவாக மானிட்டர் பல்லிகள் மற்றும் பாம்புகள் போன்ற ஊர்வன, தங்கள் நாக்கை பயன்படுத்தி அருகில் உள்ளவற்றை முகர்ந்து உணரும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட உடலை கொண்ட அந்த மானிட்டர் பல்லி தனது நாக்கை கொண்டு பாம்பின் முகத்தை எட்டியபோது, மிகவும் சிறிய உடலை கொண்ட அந்த நாகப்பாம்பு மானிட்டர் பல்லியை நேருக்கு நேர் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்று, அதன் தற்காப்பு முறைகளில் ஒன்றாக தனது தலையை விரித்து குறிப்பிடத்தக்கது. பாம்பின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் நிச்சயம் சுவாரசியமான ஒரு சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்த அந்த புகைப்பட கலைஞர் காவ் தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று Mothership செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அந்த பாம்பு படமெடுத்ததும் அந்த மானிட்டர் பல்லி பின்வாங்கியது, பாம்பை நோக்கி ஒரு பலத்த மூச்சை விட்டு அந்த இடத்தில் இருந்து அது பின்வாங்கியது. Equatorial Spitting Cobra என்ற அந்த பாம்பு மிகக்கொடிய விஷம் கொண்ட வகையை சேர்ந்த நாகம் என்றும். அதனை சீண்டாதவரை அது திரும்பத்தாக்காது என்றும் கூறப்படுகிறது.