TamilSaaga

“சிங்கப்பூரில் ஆரம்ப பள்ளி மாணவர்கள்” 2 வாரத்திற்கு ஒருமுறை ART சோதனை நடத்த MOE முடிவு

சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் 4 வார காலம் முடிவடையும் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சகம் (MOE) தெரிவித்துள்ளது. இந்த சோதனை மாணவர்களிடையே “சமூகப் பொறுப்பை ஏற்படுத்துகிறது” மேலும் பள்ளிகளை கற்றலுக்கு ஏற்ப பாதுகாப்பாக வைக்கும் என்று கல்வி அமைச்சகம் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 21) சிஎன்ஏவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது கூறியது. சிறப்பு கல்வி பள்ளிகளின் ஆரம்ப அல்லது இளைய பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கும் இந்த சோதனை பொருந்தும்.

பள்ளிகளுக்கு அக்டோபர் 25 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் 10 ART கிட்கள் விநோயோகிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை அக்டோபர் 25 முதல் அக்டோபர் 31 வரை ஒரு வாரத்திலும், மற்றொரு சோதனை நவம்பர் 8 முதல் நவம்பர் 14 இரண்டாவது வாரத்திலும் செய்யப்பட வேண்டும். Swab சோதனை செய்ய குறிப்பிட்ட வார இறுதி வரை அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். ART சோதனையிலிருந்து நேர்மறையான முடிவைப் பெறும் ஆனால் நன்றாக இருக்கும் மாணவர்கள் சுகாதார அமைச்சின் (MOH) வழிகாட்டுதல்களின்படி 72 மணி நேரம் சுய-தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று MOE தெரிவித்துள்ளது.

“அடுத்தபடிய சிறுது காலம் கழித்து நடத்தப்படும் எதிர்மறை ART முடிவு பெறும்போது மாணவர் சுய-தனிமைப்படுத்தலை முடித்து பள்ளிக்குத் திரும்பலாம்” என்று மேலும் MOE தெரிவித்துள்ளது. “அனைத்து மாணவர்களிடமும் பணியாளர்களிடமும் நல்ல தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று MOE மேலும் தெரிவித்துள்ளது.

அண்மையில் நாட்டில் பரவி வரும் அதிக அளவிலான தொற்றை அடுத்து நேற்று அமலில் உள்ள கட்டுப்பாடுகள் மேலும் 1 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த முடிவு MOE மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts