சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று சிங்கப்பூர் மலேசியா தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்ட போது அதற்கான பதில்களை வெளியுறவு அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் அளித்தார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் திரு. முகைதீன் யாசின் அவர்கள் பதவி விலகியதை தொடர்ந்து தற்போது புதிதாய் இஸ்மாயில் சப்ரி அவர்கள் பதவியேற்றுள்ளார்.
மலேசியாவின் புதிய அரசுடன் சிங்கப்பூர் ஆக்கபூர்வமான சிறந்த நட்புறவை வைத்துக்கொள்ள விரும்புவதாக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த இரண்டு நாடுகளின் உறவும் இன்னும் நீண்டகாலத்துக்கு பயனளிக்கும் வகையில் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடரும் எனவும் அவர் கூறினார்.
மலேசிய அமைச்சர்களுடன் சிங்கப்பூர் அமைச்சர்கள் நல்ல நட்புறவு கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.