TamilSaaga

சிங்கப்பூரின் புதிய “NEW” பாஸ் – ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி – Multi Talented வெளிநாட்டு ஊழியர்களுக்கான “தரமான” ஒர்க் பெர்மிட்!

SINGAPORE: சிங்கப்பூரில் வரும் ஜனவரி 1, 2023 முதல் புதிய ‘ஒன்’ (Overseas Networks and Expertise Pass – ONE) விசா நடைமுறைக்கு வருகிறது.

நீண்ட கால பணி விசா என்று அழைக்கப்படும் இந்த “ONE” விசா மூலம், சிங்கப்பூரில் நிலவும் திறமையான ஊழியர்களுக்கான பற்றாக்குறை தீர்க்கப்படும் என்று சிங்கை மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த (Overseas Networks and Expertise Pass – ONE) விசா பற்றிய முழு தகவல்களை இங்கே காணலாம்.

  • சிங்கப்பூரின் ஓவர்சீஸ் நெட்வொர்க்குகள் & நிபுணத்துவ பாஸ் (ONE) என்பது வேலைவாய்ப்பு வழங்கும் 5 ஆண்டு பணிக்கான பாஸ் ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் மாதச் சம்பளமாக $30,000 மற்றும் அதற்கு மேல் பெற வேண்டும். சிங்கப்பூரில் எம்ப்ளாய்மென்ட் பாஸ் (EP)-ல் பணிபுரிபவர்களில் Top 5% ஊழியர்களின் சம்பளத்தோடு இதனை ஒப்பிடலாம்.
  • கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் சிறந்த சாதனைகளை படைத்தவர்களாக இருந்தால், தனிநபர்கள் சம்பள அளவுகோலைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் இந்த பாஸ் பெற தகுதியானவர்களே.

இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் சிங்கப்பூரில் பல நிறுவனங்களைத் தொடங்கலாம், இயக்கலாம் மற்றும் பல நிறுவனங்களில் வேலையும் செய்யலாம்.

தகுதிப் பெறுவோரின் மனைவி அல்லது வாழ்க்கைத் துணைவர்கள், ‘Letter of Consent’ கொடுக்கும் பட்சத்தில் அவர்களும் சிங்கப்பூரில் வேலை செய்ய முடியும்.

இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் Fair Consideration Framework (FCF) வேலை விளம்பரத் தேவை மற்றும் வரவிருக்கும் Complementarity Assessment Framework (COMPASS) ஆகியவற்றிற்கு உட்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

  • ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பாஸ் புதுப்பிக்கப்படும்

வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தாங்கள் வெளிநாட்டில் ஒரு established company-ல் பணிபுரிகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது சிங்கப்பூரில் ஒரு established company-ல் பணிபுரிகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் வேலைப்பார்க்கும் நிறுவனம் குறைந்தபட்சம் US$500 மில்லியன் சந்தை மூலதனம் அல்லது குறைந்தபட்சம் US$200 மில்லியன் வருடாந்திர வருவாய் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வளவு அளவுகோல்களை சரிபார்த்த பிறகே, Overseas Networks and Expertise Pass – ONE பாஸ் வழங்கப்படும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts