TamilSaaga

சிங்கப்பூரில் 607 புதிய தொற்று வழக்கு.. Dormitory பகுதியில் 63 பேர் பாதிப்பு – முழு விவரம்

சிங்கப்பூரில் திங்கள்கிழமை (செப். 13) இரவு 12 மணி நிலவரப்படி 607 புதிய கோவிட் -19 வழக்குகளை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதி செய்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் பதிவான மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 72,294 ஆக உள்ளது

வழக்குகளில் 534 சமூக வழக்குகள் மற்றும் 63 தங்குமிட குடியிருப்பாளர்கள் வழக்குகள் உள்ளன.

157 உள்ளூர் வழக்குகள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் என தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 13, 2021 அன்று மதியம் 12 மணி நிலவரப்படி, 774 கோவிட் -19 வழக்குகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் நன்றாகவும் கண்காணிப்பிலும் உள்ளனர்.

ஆக்ஸிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படும் 57 தீவிர நோயாளிகள் தற்போது உள்ளனர். மேலும் எட்டு பேர் ஐசியுவில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களில் 51 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

கடந்த 28 நாட்களில், கடுமையான நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்தவர்களில் தடுப்பூசி போடப்படாதவர்களின் சதவீதம் 5.4 ஆகும். அதே நேரத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் 1.0 சதவிகிதம் ஆகும்.

Related posts