TamilSaaga

Olympic ஸ்பெஷல்: Condom தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு உடலுறவு – சிட்னி ஒலிம்பிக்கில் வீரர்களின் அட்டகாசம்

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு எதற்காக காண்டம் வழங்கப்படுகிறது என்பதை பற்றி ஏற்கனவே நமது செய்தியில் பார்த்தோம்.

இப்போது 2000-ஆவது ஆண்டு ஆஸ்திரேலியா சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் எந்தளவுக்கு வீரர்கள் எல்லையில்லாமல் உடலுறவில் ஈடுபட்டார்கள் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

உடலுறவில் வீரர்கள் :
ஒலிம்பிக்கில் பங்குபெறும் வீரர்கள் பெரும்பாலும் அதிக அளவில் உடல் மற்றும் மன அழுத்தத்தை கொண்டவர்களாக இருப்பதனால் அவர்கள் தங்களின் மன நிம்மதிக்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களுக்காக 1988 ஆம் ஆண்டு முதலாகவே ஒலிம்பிக் சார்பில் இலவச காண்டம்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சிட்னி ஒலிம்பிக் :
அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரரான Ryan Lochte என்பவர் ஒலிம்பிக்கில் வீரர்கள் உடலுறவில் ஈடுபட்டதை பற்றி கூறியுள்ளார். 2000-ஆவது ஆண்டு நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில் சுமார் 70 முதல் 75 சதவீதம் வரையிலான வீரர்கள் உடலுறவு கொண்டவர்கள் தான். திறந்த வெளியில் புல் தரையில் கட்டிடங்களுக்கு இடையிலான இடைவெளியில் கூட அவர்கள் உடலுறவு கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

இப்படி எல்லைமீறி உடலுறவு மேற்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் காண்டம்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது 20,000 காண்டம் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்து புதிதாக வாங்கி வீரர்களுக்கு வழங்கியது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் நிர்வாகம்.

இந்த செய்தியை 12 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் ரியான் தெரிவித்துள்ளார். OutlookIndia இதனை வெளியிட்டுள்ளது.

Related posts