TamilSaaga

சிங்கப்பூரில் அதிகரித்த வெளிநாட்டு ஊழியர்களின் வருகை.. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் வெளியிட்ட MOM – இனி எல்லோருக்கும் நல்ல காலம் தான்

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 29) சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) மதிப்பீடுகளின்படி, சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை ஏப்ரல் முதல் தளர்த்தியதால், 2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த வேலை வாய்ப்புகள் அதிகறித்துள்ளன, முக்கியமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்று MOM தெரிவித்துள்ளது.

MOM கூறியதாவது, அதிக குடியிருப்பாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் குடியுரிமை இல்லாத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஏப்ரல் முதல் ஜூன் வரை வலுவாக உயர்ந்துள்ளது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் வேலையின்மை விகிதங்கள் பெருந்தொற்று முந்தைய நிலைகளில் இருந்தன என்றும், மேலும் ஆட்குறைப்பு எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது என்று கூறியுள்ளது.

ஆறு அதிர்ஷ்ட எண்களும் நச்சுனு பொருந்தியிருக்கு.. அடித்தது S$11,49,738 ஜாக்பாட் – சிங்கப்பூர் TOTO Draw மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரரான “மச்சக்காரன்”

புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களைத் தவிர்த்து, மொத்த வேலைவாய்ப்பு இரண்டாவது காலாண்டில் 64,400 அல்லது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டில் இருந்த 42,000 அல்லது 1.2 சதவீதம் என்ற அளவு ஒப்பிடும்போது இது வேகமான வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்கள் வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம்.. ஆச்சர்யத்தில் மூழ்கிய Chess Olympiad அரங்கம் – கண் இமைக்க மறந்து கைதட்டி பாராட்டிய வெளிநாட்டவர்கள்

கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தியதுதான் இந்த உயர்வுக்குக் காரணம். “இந்த ஆண்டு ஏப்ரல் முதல் எல்லைக் கட்டுப்பாடுகளில் குறிப்பிடத்தக்க தளர்வு அளிக்கப்பட்டதன் மூலம், மேற்குறிய துறைகளில் உள்ள முதலாளிகள் பதவிகளை நிரப்பவும், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தியுள்ளனர்” என்று MOM இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

உண்மையில் இந்திய போன்ற வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வர காத்திருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts