TamilSaaga

“சென்னை பெண்ணை மணக்கும் கிரிக்கெட் வீரர் Maxwell” – ஆஸ்திரேலிய மாப்பிள்ளைக்கு அடிக்கப்பட்ட “பாரம்பரிய தமிழ் பத்திரிகை”

ஆஸ்திரேலியா நாட்டின் மிகசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தான் Maxwell, அதிலும் குறிப்பாக உலக புகழ்பெற்ற IPL போட்டிகளில் இந்தியாவின் Royal Challengers Bengaluru அணிக்காக அவர் பல போட்டிகளில் விளையாடி இந்திய மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்திற்காக 11 கோடி கொடுத்து RBC அவரை ஏலம் எடுத்து தக்கவைத்துக்கொண்டது என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது தனது திருமனம் குறித்த ஒரு ஏறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார் Maxwell.

“அது தமிழ்நாடு, அதன் தலைநகர் சென்னை” : சரவெடி பதிலால் British நிகழ்ச்சியை கலக்கும் சிங்கப்பூரர் – சபாஷ்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தமிழ் பெண்ணை அவர் வருகின்ற மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி தான் தற்போது Talk of Town. வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மசி படித்தவர் என்று கூறப்படுகிறது. தற்போது அவர்களது திருமணத்திற்கான தேதி முடிவு செய்யப்பட்டிருந்தாலும் இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டே இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களது திருமணம் வரும் மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போன இவர்களது திருமணம் தற்போது நடக்கவுள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த வினி ராமன் பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ள நிலையில் இவர்களுது திருமண பத்திரிகை தற்போது வைரலாகி வருகின்றது என்றே கூறலாம். காரணம் இந்த கல்யாண பத்திரிகை தமிழர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் அந்த மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

“சிங்கப்பூர் NUS பல்கலைக்கழக வளாகம்” : இறந்து கிடந்த 19 வயது வெளிநாட்டு மாணவி – போலீசார் தீவிர விசாரணை

நிச்சயதார்த்தம் துவங்கி கல்யாணம் வரை அனைத்தும் தமிழர்கள் முறைப்படி நடக்கவிருப்பதால் Maxwell திருமணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இணையத்தில் இந்த பத்திரிக்கையை பார்க்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts