TamilSaaga

சிங்கப்பூரில் “அருமையான” வாழ்க்கை.. தலைக்கேறிய “சபலம்”.. கடனைக் கூட அடைக்காமல் மாத சம்பளத்தை அந்த பொம்பள வீட்டுக்கு அனுப்பினேன் – என் வாழ்க்கையே போச்சு!

நமது சிங்கப்பூரில் பெண் சபலத்தால் வாழ்க்கையை, பணத்தை சில வெளிநாட்டு ஊழியர்கள் இழக்கும் அவலம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி கையில் கிடைத்த ஒரு அருமையான வாழ்க்கையை தவறவிட்டு, இன்று மண்புழுவாய் தன்னைத்தானே சுருக்கிக் கொண்டு வாழும் ஜெயராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக….

“வணக்கம் சார்… என்னோட வாழ்க்கை பற்றிய உங்க தமிழ் சாகாவுக்கு பேச நான் ரொம்ப நாள் டைம் எடுத்துக்கிட்டேன். மன்னிக்கவும். ஏன்னா.. அதை வெளியில் சொல்ல ரொம்ப சங்கடப்பட்டேன். உங்க டீம்-ல இருந்து பேசுனப்போ முதல்ல “வேண்டாம்”-னு மறுத்தேன்.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, இதை வெளியில் சொல்லலாம்-னு தோணுச்சு. ஏன்னா.. அப்படி சொன்னா, என் வாழ்க்கையில நான் பண்ணப்போற ஒரே உருப்படியான செயலா இது இருக்கும்-னு தோணுச்சு. அந்த நம்பிக்கை-ல தான் உங்ககிட்ட பேசுறேன்.

என்னோட சொந்த ஊர் அரியலூர். அப்பா பொரிகடலை கடை வச்சிருந்தார். அம்மா வீட்டை பார்த்துக்குவாங்க. ஒரு தம்பி இருக்குறான். என்னை விட 4 வயசு இளையவன். பெரிய அளவுல வருமானம் இல்லாட்டனாலும், ஒரு ரூவா கடன் இல்லாம வாழ்ந்துட்டு வந்தோம். ஆனா, பெருசா எந்த முன்னேற்றமும் இல்ல. அளவான வாழ்க்கை தான். ஊருல எங்க சொந்தக்காரங்க எல்லாம் நிலம் புலம்-னு வசதியா இருந்தாங்க. நாங்க மட்டும் வசதி குறைவா இருக்குமே-ங்குற உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்துச்சு.

மேலும் படிக்க – சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 55 “ஆணுறைகள்”.. ஒரே நாளில் 3, 4 பெண்களுடன் “உடலுறவு” – நீச்சல் வீரர் Ryan Lochte பகிர்ந்த உண்மை

குறிப்பா, அம்மா எப்போதும் அதை பத்தி பேசிக்கிட்டே இருப்பாங்க. “ரெண்டு புள்ளைய பெத்தும் நாம இப்படியே இருக்கோமே-னு” சொல்லிட்டே இருப்பாங்க. இதனால, ஒரு கட்டத்துல வெளிநாடு போய் சம்பாதிக்கலாம்-னு அம்மா சொன்னாங்க. ஆனா, அப்பா அதுக்கு ஒத்துக்கல. இங்கயே ஏதாவது வேலை செய்யட்டும்-னு சொன்னாரு. ஏன்னா, நானும் சரியா படிக்கல.. தம்பிக்கும் படிப்பு வரல.. இதனால, அப்பா கடையைத் தான் ரெண்டு பேரும் கவனிச்சிட்டு இருந்தோம். ஆனா, அம்மா நான் வெளிநாடு போகணும்-ங்குறதுல உறுதியா இருந்தாங்க.

கிட்டத்தட்ட 6 மாசம் வெளிநாடு போறதுக்கு முயற்சி பண்ணேன். எதுவும் செட் ஆகல. ஏஜெண்டுங்க கிட்ட பணம் கொடுக்க பயம். அப்புறம், ஒருவழியா என் நண்பனோட நண்பன் மூலமா சிங்கப்பூர் போறதுக்கு ஏற்பாடு செஞ்சோம். நேர்காணலும் நல்ல படியா முடிஞ்சுச்சு. அடுத்த ரெண்டே மாசத்துல சிங்கப்பூர் போக ஏற்பாடு ஆனுச்சு. முதன் முறையா அப்பா கடன் வாங்குனார். அதுவும், எங்க வீட்டை அடமானம் வச்சார். அந்த பணத்துல தான் 2011ம் ஆண்டு இறுதியில சிங்கப்பூர் கிளம்பினேன்.

முதல் 6 மாசம் ரொம்ப கஷ்டப்பட்டேன். வேலை சரியா புரியல. முதலாளிக்கிட்ட திட்டு வாங்கினேன். ‘என்னடா இவன்’-னு கோவப்படுற அளவுக்கு மந்தமா இருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் மெல்ல மெல்ல பிக்-அப் பண்ணேன். வேலை சுலுவா இருந்துச்சு. லாவகமா எல்லாத்தையும் செஞ்சேன். அடுத்த ஆறே மாசத்துல, அதே முதலாளி, ‘சூப்பர் டா’-னு சொல்லும் அளவுக்கு நடந்துக்கிட்டேன். அடுத்த 1 வருஷம் போனதே தெரியல. மாசாமாசம் குறைஞ்சது 40 ஆயிரம் வீட்டுக்கு அனுப்பிடுவேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம்.

ஆனா, அது ரொம்ப நாள் நீடிக்கல… (தயங்குகிறார்)… சற்று மௌனமாக இருந்த பிறகு பேசுகிறார். “நான் செஞ்ச இந்த தவறை வேறு யாரும் செய்யக்கூடாது. நான் செஞ்ச இந்த துரோகத்தை வேற யாரும் செய்யக்கூடாது. நல்லா சம்பாரிச்சுட்டு இருந்தப்ப சிங்கப்பூருல ஒரு பொண்ணு கூட பழக ஆரம்பிச்சேன். அந்த பொண்ணு இந்தோனேசியாவைச் சேர்ந்தது. நல்லா பேசும். அவ்ளோ நெருக்கமா பழகினோம்…. (மீண்டும் அமைதியானார்).. ரூம்-ல ஒண்ணா தங்குற அளவுக்கு நெருக்கமா இருந்தோம்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் S-Passல் வேலை பார்த்த அனுபவம் உண்டா? இதோ மீண்டும் சிங்கப்பூரில் வேலை செய்ய ஒரு வாய்ப்பு – 22 துறைக்குள் ஆட்கள் தேவை

என் மாத சம்பளத்தை கணக்கே இல்லாம செலவு செஞ்சேன். சம்பளம் வாங்கின மறு நாளே ஒரு பைசா கூட மிச்சம் இல்லாம செலவு செய்யும் அளவுக்கு போனேன். எனக்கு தெரியும்.. நான் தப்பு பன்றேன்னு.. ஆனா, என்னால கட்டுப்படுத்த முடியல. வீட்டுல ‘முதலாளி 3 மாத சம்பளத்தை சேர்த்து கொடுக்குறேன்னு சொல்லிட்டார்’-னு பொய் சொல்லி சமாளிச்சேன். நாளாக நாளாக அந்த பொண்ணுக்கு என்னால செலவு செய்யவே முடியல. அந்த பொண்ணு வீட்டுக்கு நான் என் சம்பள பணம் முழுசையும் போட்டுவிடுற அளவுக்கு போயிட்டேன்.

இதனால், நண்பர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழல். ஒரு கட்டத்துல எல்லாம் சேர்ந்து கழுத்தை நெரிக்கும் அளவுக்கு வந்துடுச்சு. செலவு பண்ற வரை கூட இருந்த அந்த பொண்ணு, அதுக்கு அப்புறம் ஆள் எங்கன்னு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போயிட்டா. சரியா…5 மாத சம்பள பணம் முழுவதையும் அந்த பெண்ணுக்காக செலவு செஞ்சு கரியாக்கினேன்.

ஒரு கட்டத்துல நண்பர்கள் எல்லாம் நான் அந்த பொண்ணுக்கு செலவு செஞ்சத கண்டுபிடிச்சுட்டாங்க. கம்பெனியிலயும் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு.. எல்லார் கால்களையும் விழுந்தேன். இனி ஒழுங்கா இருக்கிறேன்னு கெஞ்சினேன். ஆனா, என் முத்லாளி என்னை நம்ப தயாரா இல்ல.. நண்பர்கள் எல்லாரும் என் வீட்டுக்கு தகவல் சொல்லி, அவங்களே பணம் போட்டு என்னை ஊருக்கு அனுப்பி வச்சிட்டாங்க. (கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது)

ஃபோன்-ல சொன்னப்பவே என் அப்பா, அம்மா பாதி செத்துட்டாங்க. அவங்க முகத்துல என்னால முழிக்க முடியல. போற வழியிலேயே சூசைட் பண்ணிரலாம்-னு முடிவு பண்ணிட்டேன். எப்படி சாகுறதுனு தான் பிளைட்-ல யோசிச்சிட்டு வந்தேன். அவ்வளவு அவமானம்.. அசிங்கம். அருவருப்பா இருந்துச்சு. ஆனா, சாகுறத்துக்கும் பயமா இருந்துச்சு.

வீட்டுக்கு போனேன்.. தலைகுனிஞ்சு நின்னேன்.. அம்மா மட்டும் வந்து திட்டிட்டே அடிச்சாங்க. அப்பா ஒரு வார்த்தை கூட பேசல. என் தம்பி பார்த்த பார்வை… அதை இப்போ நினைச்சா கூட கழுத்த அறுத்து செத்துடலாம்-னு தோணுது. அப்படி ஒரு பார்வை அது. நான் எவ்ளோ பெரிய அசிங்கத்தை பண்ணிட்டு வந்திருக்கேன்னு அவன் பார்வை-ல முழுசா தெரிஞ்சிக்கிட்டேன். 2 நாளா யாருக்குமே வீட்டுல சோறு, தண்ணீ இறங்குல. அக்கம்பக்கத்துல இருந்து எல்லோரும் வந்து துக்கம் விசாரிக்குற மாதிரி வந்துட்டு போனாங்க.

என்னால.. அதுக்கு மேலையும் பொறுக்க முடியல.. ரூமுல இருந்த Fan-ல சுருக்கு போட்டுக்கிட்டேன். தம்பி தான் அதை கண்டுபிடிச்சு கத்தினான். எல்லோரும் வந்து தூக்கி காப்பாத்துனாங்க. அப்போ தான் என் அப்பா வெடிச்சு அழுதார். அந்த மனுஷன் இத்தனை வருஷத்துல நான் ஒருமுறை கூட அழுது பார்த்ததில்ல. பாவி.. பாவி..னு சொல்லி சொல்லி அழுதார்.

மேலும் படிக்க – 14 ஆண்டுகள்.. நினைத்தபோதெல்லாம் மகள்களை சீரழித்த தந்தை (அரக்கன்) : வழக்கை கண்டு அதிர்ந்த நீதிபதி – தோலை உரிக்க காத்திருக்கும் சிங்கப்பூர் போலீஸ்

அப்படியே நாட்கள் போச்சு. நாங்க எங்க சூசைட் பண்ணிக்குவனோ-னு என் தம்பி என்னை சுத்தி சுத்தி வந்தான். ஒருநாள் என்கிட்ட வந்து, ‘அப்பா உன்னை கூப்பிடுறார்’-னு சொன்னான். போய் நின்னேன். ‘கடைய போய் பார்த்துக்க’-னு சொல்லி நகர்ந்து போயிட்டார். மீண்டும் அதே கடை.. அதை கல்லாப்பெட்டி-னு போய் உட்கார்ந்தேன். இன்னைக்கு வரை கடையை தான் பார்த்துகிட்டு இருக்கேன். தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சு. எனக்கு யாரும் பொண்ணு கொடுக்க முன்வரல.. எனக்கும் அதை பத்தின நினைப்பே வரல. கடையை மட்டும் பார்த்துக்கிட்டேன். இப்பவும் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. என் வாழ்க்கை இந்த கடையோட தான் முடியப் போகுது.

ஏன்னா.. கடவுள் கொடுத்த அருமையான வாழ்க்கையை, சபல புத்தியால தவறவிட்டேன்.. இப்போ என் வாழ்க்கை-ல அடுத்தக்கட்டத்துக்கு போக முடியாம அப்படி நின்னுட்டேன். நின்னது மட்டுமில்லாம, அசிங்கம், அவமானம், புறக்கணிப்பு-னு எல்லாத்தையும் இப்போ வரை அனுபவிச்சிட்டு இருக்கேன். என் தம்பி கல்யாணத்துக்கு கூட நான் போகல (கலங்குகிறார்). எனக்கு போக பிடிக்கல. அவமானமா இருந்துச்சு. என்னால அவன் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நினைச்சேன். நான் சிங்கப்பூருல இருந்து வந்ததுக்கு அப்புறம் என் அப்பா என்கிட்ட மொத்தமா ஒரு 50 வார்த்தை பேசியிருப்பார். என் அம்மா ஒரு 100 வார்த்தை பேசியிருப்பாங்க. இதைவிட நான் செஞ்ச தப்புக்கு வேற என்னங்க தண்டனை வேண்டும்?. கூடவே வாழுற அப்பா, அம்மா பேசாம இருக்கிறதை விட ஒரு சித்ரவதை இந்த உலகத்துல இருக்க முடியாது. அதை தினம், தினம் அனுபவிச்சிட்டு வரேன். இன்னமும் அனுபவிப்பேன்!” என்று முடித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts