TamilSaaga

சுற்றித்திரிந்த கோழிகளை விரட்டி விரட்டி அடித்த வாலிபர்.. சிங்கப்பூர் இணையத்தில் வைரலான வீடியோ – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கோழிகள் பலருக்கும் விருப்பமான உணவு தான் என்றபோது சிலர் அதை துன்புறுத்தும்போது நிச்சயம் சாதாரண மனிதர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அந்த வகையில் சிங்கப்பூரில் கோழிகளை விரட்டி விரட்டி அடித்த ஒரு நபரின் செயல் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.

Singapore Wild Life Sightings என்ற ஃபேஸ்புக் குழுவில் வெண்டி லியோங் என்பவர் பதிவேற்றிய வீடியோ தான் இப்பொது சிங்கப்பூர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. லியோங்கின் கூற்றுப்படி, இந்த சம்பவம் நேற்று மே 22 அன்று மாலை 5:37 மணியளவில் ஹூகாங் அவென்யூ 3ல் உள்ள கார்பார்க் பகுதியில் நடந்துள்ளது.

சுமார் 1 நிமிடம் மற்றும் 25 வினாடிகள் கொண்ட அந்த கிளிப்பில், இரண்டு சாம்பல் நிற சில்கி கோழிகள், இரண்டு வெள்ளைக் கோழிகள் மற்றும் ஒரு காட்டுப் பறவை அடங்கிய கோழிக் கூட்டத்தை ஒரு மனிதன் நெருங்குவதைக் காணலாம்.

சிங்கப்பூரில் பட்டம் பெற்ற “சுப்ரீம் ஸ்டார்” மகன்.. நேரில் சென்று வாழ்த்துச்சொன்ன தாய் மற்றும் தந்தை – வெளியான கூல் Photos!

சுற்றித் திரியும் அந்த கோழிகள் உரிமையாளருடையவையா அல்லது காட்டுக் கோழிகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், கோழிகள் அந்த மனிதன் நெருங்கி வரும்போது பயப்படாமல் நிற்பதை நம்மால் காணமுடிகிறது.

கோழிகள் துன்புறுத்தப்பட்ட வீடியோ – இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்

காணொளியின் தொடக்கத்தில், அந்த மனிதன் கோழிகளின் நடமாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம். பிறகு அவர் கோழிகளை நெருங்கி, சிறிது நேரம் கழித்து, வலது காலால் அங்கிருந்த கோழிகளில் ஒன்றை இரண்டு முறை உதைக்கிறார்.

தப்பிக்க முயன்ற கோழிகளைத் துரத்திச் சென்ற மனிதன், சாம்பல் நிற சில்கிகளில் ஒன்றை உதைத்து துன்புறுத்துகிறார். அவர் மீண்டும் சாம்பல் நிற கோழியை உதைக்க முயன்றார், ஆனால் அப்போது அவர் செருப்பு அறுந்து விழுகிறது.

சிங்கப்பூரில் உருவெடுக்கும் புது வகை மோசடி.. போலி மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கும் MOM – வெளிநாட்டு ஊழியர்களே உஷார்!

மீண்டும் செருப்பை எடுத்து சரி செய்துவிட்டு, அருகில் இருந்த கோழி ஒன்றின் மீது அந்த நபர் அதை வீசுகிறார். அவர் கோழிகளைப் பின்தொடர்ந்து, இந்தச் செயலை மீண்டும் ஒருமுறை செய்கின்றார். வீடியோ முழுக்க அந்த கோழிகளை அவர் துரத்தி துரத்தி அடிக்கிறார்.

அந்த மனிதனின் செயல்கள் கடுமையான விமர்சனத்தை ஈர்த்துள்ளது, அங்கு அவரது வன்முறைச் செயல்களுக்காக அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts