TamilSaaga

சிங்கப்பூரில் உருவெடுக்கும் புது வகை மோசடி.. போலி மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கும் MOM – வெளிநாட்டு ஊழியர்களே உஷார்!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) அதன் அதிகாரிகளிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் மின்னஞ்சல்கள் குறித்து மோசடி எச்சரிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

இன்று திங்கள்கிழமை (மே 23) வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், MOM தங்களது Labour Relations and Workplaces Division பிரிவில் இருந்து அனுப்பப்பட்டதை போல தோன்றும் ஒரு போலி மின்னஞ்சல் பரவி வருவதாக தொழிலாளர்களை எச்சரித்துள்ளது.

தொழிலாளிகள் தங்கள் முதலாளிகளிடம் இருந்து தங்கள் சம்பள பணத்தை பெற்றுவிட்டார்களா? என்று வினைவி அந்த போலி மின்னஞ்சல் வருவதாக கூறப்படுகிறது.

Ministry of Man Power Facebook Post

MOMன் முகநூல் பதிவில் உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் காட்டப்பட்டுள்ள மோசடி மின்னஞ்சல், அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து முதலாளிகளும் தங்கள் மாதாந்திர அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சகம் கோருவது போல உள்ளது.

சிங்கப்பூருக்கு மீண்டும் விமானங்கள் இயக்க முடிவு.. பிரபல Fire Fly Airlines அறிவிப்பு – அடுத்த மாதம் முதல் இயக்கப்படும் ATR 72-500!

மேலும் அந்த போலி மின்னஞ்சலில் சில Zip Files இருப்பதாகவும், அதை தொழிலாளர்கள் பூர்த்தி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது ஒரு மோசடி என்றும், Zip Filesகளை கொண்ட மின்னஞ்சல்களை MOM அனுப்பாது என்றும் உறுதி செய்துள்ளனர்.

இந்த மோசடியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் அல்லது அழைப்புகள் ஏதேனும் தெரிந்தால், 1800-722- 6688 என்ற மோசடிக்கு எதிரான உதவி எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம் என்று MOM தனது இணையதளத்தில் ஒரு ஆலோசனையில் கூறியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts