சிங்கப்பூரில் இரு வெளிநாட்டுத் தொழிலாளர்களை இனவெறியுடன் பேசி அவமானப்படுத்திய நபர் ஒருவர், அந்த இருவரும் சம்பவம் நடந்தபோது தனது வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்ததால் அவர்களை அவ்வாறு பேசுவது தனது “அரசியலமைப்பு உரிமை” என்று கூறியது கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நடந்து வந்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு, 56 வயதான லீ போ கியான் என்பவருக்கு, இன்று வியாழன் அன்று (ஜூலை 28) ஒரு வார சிறைத்தண்டனை மற்றும் $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
லீயின் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில், துணை அரசு வழக்கறிஞர் சீன் தேஹ் தனது சமர்ப்பிப்புகளில் கூறியதாவது : “இது போன்ற அரசியலமைப்பு உரிமை எதுவுமே சிங்கப்பூரில் இல்லை என்பது வெளிப்படையான ஒன்று” என்று கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட திரு. ரத்னசிங்கம் ஜதீசன் மற்றும் திரு. கிருஷ்ணன் கார்த்திகேயன் ஆகியோரை அணுகி, கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி தோவா பயோவில் அவர்களை அவமதித்து பேசியபோது, லீ தனது மூக்கு மற்றும் வாயை மறைக்கும்படி முகமூடி அணியத் தவறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.
நீதிமன்ற ஆவணங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் சொந்த நாடு குறித்து தகவல் எதுவும் வெளியிடவில்லை என்றாலும் அவர்கள் தமிழர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களான திரு. ரத்னசிங்கம் மற்றும் திரு. கிருஷ்ணன் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் லோரோங் 5 டோ பயோவில் இணைப்புப்பாதை அமைப்பதற்கான அளவீடுகளை எடுத்துக்கொண்டிருந்தாக நீதிமன்றம் தெரிவித்தது.
அப்போது நல்ல மலை பெய்த நிலையில் அவர்கள் அருகில் இருந்த லீயின் வீட்டின் ஓரத்தில் மழைக்காக ஒதுங்கியுள்ளனர். அப்போது தான் லீ அவர்களை இனவெறி கருத்துக்களால் பேசி காயப்படுத்தியுள்ளார்.