சிங்கப்பூரில் கடந்த மே மாதம் கொரோனா தொற்றை தடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் அமலில் இருந்து போது ரமணா நரேந்திரன் என்ற ஒரு மருத்துவரை 24 வயது நபரான முஹம்மது இர்ஷாத் என்பவர் சந்தித்து போய்யாக போலி சான்றிதழை ஏமாற்றி பெற்றுள்ளார்.
தனக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக பொய்யாக கூறி சான்றிதழ் பெற்றுள்ளார். சான்றிதழ் பெற்ற பிறகு 5 நாட்கள் வெளியே சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவருக்கு 10,000 வெள்ளி பிணை அளிக்கப்பட்டது. அடுத்த மாதம் அந்த நபர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 6 மாத சிறை தண்டனையும் 10,000 வெள்ளியும் அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மோசடி குற்றமும் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதம் விதிக்கப்படலாம்.