சிங்கப்பூருக்கு வந்துள்ள Republic of Estonia நாட்டின் அதிபர் Kersti Kaljulaid அவர்கள் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களை சந்தித்து பேசினார்.
சிங்கப்பூர் மற்றும் எஸ்டோனியாவின் நீடித்த நட்பு தற்காப்பு உறவினை இரண்டு நாடும் மீண்டும் மறு உறுதிசெய்து கொண்டன.
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அவர்களுடனும் எஸ்டோனிய அதிபர் சந்துத்து பேசினார்.
நாட்டின் பன்முகத்தன்மைகள், மேம்பாடு, இணைய பாதுகாப்பு ஆகியவற்றையும் வட்டார அரசியல் தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான தற்காப்பு உறவுகள், பாதுகாப்பு மற்றும் அதற்கான ஒத்துழைப்பு பற்றியும் ஆராயப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.