இப்படியெல்லாமா நம்பிக்கைகள் இருக்கும் என்று கேட்கும் அளவுக்கு சிங்கப்பூரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து mothership தளம் வெளியிட்டுள்ள செய்தியில், “சிங்கப்பூரின் Choa Chu Kang பகுதியில் உள்ள பிரபல McDonald’s உணவகத்துக்கு ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, ஒரு காரின் அருகே சிகப்பு நிற கவர் ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக கீழே கிடந்துள்ளது.
அவர் அதை எடுத்துப் பார்க்க, உள்ளே ஏகப்பட்ட நோட்டுகளை பர்ஸை அலங்கரித்துக் கொண்டிருந்தன. பரவசமடைந்த அந்த நபர், கவரை அப்படியே வீட்டுக்கு எடுத்து வந்து, அதனை வீடியோவாக எடுத்து டிக்டாக்-ல் வெளியிட்டார்.
ஒரேநாளில் இந்த வீடியோ 400,000 views-களை பெற்றது. பார்த்தவர்கள் அத்தனை பேரும் உள்ளே எவ்வளவு டாலர் இருந்தது என்பதை அறிய பேராவல் கொண்டிருந்தது views-களில் எதிரொலித்தது. கிட்டத்தட்ட அந்த சிவப்பு கவரில், S$1,000 டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சரி.. மெயின் மேட்டருக்கு வருவோம்.
அந்த வீடியோவுக்கு சிலர் அளித்த கமெண்ட்-கள் பகீர் ரகத்தில் இருந்தன. அதாவது, சீனாவில் ஒரு நடைமுறை அல்லது ஒரு நம்பிக்கை உள்ளதாம். அதாவது, அங்கு ஏதாவது ஒரு இளம் பெண், திருமணம் ஆகாமலேயே இறந்துவிட்டால், இதுபோன்று ஒரு கவர் முழுக்க பணத்தை நிரப்பி ரோட்டில் போட்டுவிடுவார்களாம்.
அந்த கவரை எந்த ஆண் மகன் முதலில் எடுக்கிறாரோ, அவரே அந்த இறந்து போன இளம் பெண்ணின் கணவராக முடிவு செய்யப்படுவாராம். (எதே!)
இந்த தகவலை அந்த டிக்டாக் வீடியோவுக்கு கீழ் பலரும் பதிவிட, சற்றும் கலங்காத அந்த நபர் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா?
“அப்போ நான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டேனா? பணமும் கிடைச்சாச்சு, கட்டிக்க பொண்ணும் கிடைச்சாச்சு” என்று கூறியிருக்கிறார்.