TamilSaaga

சிங்கப்பூர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்.. Safe Entry Gateway Check-out கருவிகள் – விரைவில்

பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை கண்காணிக்க, பாதுகாப்பு நுழைவு வாயில் வருகை சரிபார்ப்பு (Safe Entry Gateway Checkout) கருவிகளை பொருத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவை தொடர்பு சம்பந்தப்பட்ட தடங்களை துல்லியமாக அறிய உதவும் என்றும் கூறியுள்ளது.

மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் இதனை பயன்படுத்துவது அவசியமானது மற்றும் கட்டாயமானது. மேலும் இது நுழைவுக்கு மட்டும் பொருந்தும், வெளியேறும் போது மீண்டும் இதனை கண்காணிப்பது கட்டாயமானது இல்லை.

இந்த Safe Entry Gateway Checkout கருவியை பயண்படுத்தி கண்காணிக்க பல வர்த்தக அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஆகையால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான உணவு மையங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் மருந்தகங்கள் போன்ற இடங்களில் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் தகுதி உள்ள வர்த்தக அமைப்புகளுக்கு கருவி விரைவில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

Related posts