TamilSaaga

“சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் Dormitoryயில் சண்டை” : பலகையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம் – சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் Dormitoryயில் ஆண் ஒருவரின் மரணத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 26 வயது நபர் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டதாக நேற்று சனிக்கிழமை (ஜனவரி 1) வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் OCBC வங்கி சம்பந்தப்பட்ட மோசடிகள்” : 469 வாடிக்கையாளர்களிடம் சுருட்டப்பட்ட 8.5 மில்லியன் – அம்பலமானது எப்படி?

நேற்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் சண்டை நடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்து காவல்துறையினர் அங்கு வந்தபோது 37 வயதுடைய நபர் ஒருவர் தலையில் காயங்களுடன் தரையில் அசைவற்று கிடப்பதை அதிகாரிகள் கண்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சுயநினைவின்றி இருந்த நிலையில் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் வேலை தொடர்பான நிகழ்ச்சிகள் : ஜனவரி 3 முதல் அமலாகும் “புதிய தளர்வு” – சுகாதார அமைச்சகம்

முதற்கட்ட விசாரணையில், அந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் கைதான அந்த 26 வயதுடைய நபர் இறந்த அந்த 37 வயதுடைய நபரை, திருகுகள் (Screws) கொண்ட மரப் பலகையால் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய ஆயுதம் மூலம் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக இன்று ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தடியடி அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, தடியடி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts