TamilSaaga

“மிகச்சிறிய தவறால் ஏற்பட்ட விபரீதம்” : எல்லா ஆவணங்கள் இருந்தும் “ரத்து செய்யப்பட்ட திருச்சி – சிங்கப்பூர் பயணம்”

மிகச்சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய பொருள் சேதத்திற்கும், அதீத மனஉளைச்சலுக்கும் வழிவகுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஒருவரின் விமான பயணம். நேற்று ஜனவரி 1 புத்தாண்டு பிறந்த நேரத்தில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து Work Pass Holder ஒருவர் Indigo விமானம் 6E-37 மூலம் சிங்கப்பூர் புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் Dormitoryயில் சண்டை” : பலகையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம் – சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது

Entry Approval, பெருந்தொற்று Negative சான்றிதழ், Insurance, தடுப்பூசி சான்றிதழ், விமான டிக்கெட், விசா மற்றும் Passport என்று எல்லாமே முறையாக வைத்திருந்த நிலையில் தனது சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளார். ஆனால் Boarding செய்ய சென்ற நேரத்தில் அவரது பாஸ்போர்ட் சற்று சேதமடைந்திருந்த நிலையில் அவரது முழுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்போர்ட் இடையில் சில நூல்கள் வெளிப்பட்டு, பாஸ்போர்ட்டின் முதல் பக்கம் சற்று சேதமடைந்திருந்த நிலையில் அவருடைய விமான பயணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பல முயற்சிகளுக்கு பின்னல் சுமார் 3 மணிநேரம் கழித்து அவரை விமான சேவை நிறுவனம் Boarding செய்ய அனுமதித்து. ஆனால் இந்திய குடியேற்ற (Immigration) அதிகாரிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து, முறையாக எல்லா ஆவணங்கள் பெற்றும் அந்த பயணியின் விமான பயணம் ரத்தாகி பெரும் பொருள் இழப்பிற்கு மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “அமெரிக்காவில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற வழக்கு” – சிங்கப்பூரில் இரு “இந்தியர்கள்” மீது குற்றச்சாட்டு

நாம் மிகச்சிறிய பிரச்சனை என்று கருதும் ஒரு விஷயம் இறுதியில் நம்மை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதை பலர் உணர்வதில்லை. பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து, பல கனவுகளோடு வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பலர் இந்த நிகழ்வை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts