TamilSaaga

“உன்னை கர்பமாகிட்டா உனக்கு வேற வழியில்லை” : பெண் தோழிக்கு நடந்த கொடூரம் – 26 வயது நபர் கைது

சிங்கப்பூரில் 26 வயதான ஒருவர் தனது முன்னாள் காதலியை 10 வருடங்களாக கத்தியைக் காட்டி மிரட்டி மற்றும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பு அவர் தனது புதிய காதலனுடன் பாலியல் ரீதியாக ஒன்று சேர்ந்ததை பற்றி பேசினார். அந்த நபர் அப்பெண்ணை கர்ப்பம் தரிப்பதற்காக வேண்டுமென்றே பலாத்காரம் செய்ததாக அவரிடம் கூறினார், இதனால் அப்பெண்ணுக்கு அவனை திருமணம் செய்வதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பெயரிட முடியாத அந்த நபர், கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 14) தன் மீது சுமத்தப்பட்ட ஒரு பாலியல் பலாத்கார குற்றத்தை ஒப்புக்கொண்டார். இரண்டாவது பாலியல் பலாத்காரம், மேலும் மோசமான பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையில் பரிசீலிக்கப்படும். பாதிக்கப்பட்டவரை அந்த ஆண் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது சந்தித்தார் என்று நீதிமன்றம் கூறியது. அவருக்கு 16 வயதும் அப்பெண்ணுக்கு 14 வயதும் இருந்தபோது அவர்கள் டேட்டிங் செய்யத் தொடங்கினர்.

இதனையடுத்து இரண்டு முறை அந்த பெண்ணை அவர் கர்பமாகியுள்ளார்.முதலில் அவளுக்கு 14 வயது இருந்தபோதும், பிறகு 23 வயது இருந்தபோதும் அவ்வாறு செய்து பின்னர் அந்த பெண் கருக்கலைப்புக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 11, 2019 அன்று, 24 வயதான அந்த பாதிக்கப்பட்ட நபர் காதலன் தன்னை ஏமாற்றினார் என்று அறிந்து அவருடன் Breakup செய்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்டவரை தன்னுடன் சமரசம் செய்யும்படி அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டார், ஆனால் அப்பெண் அவரை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்ய அவரும் விடாமல் அவரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.

அதன் பிறகு அந்த பெண்ணுக்கு வேறொரு ஆண் கிடைத்த நிலையில் மீண்டும் அவரை விடாமல் துரத்திய அவர் அவரை சமாதானப்படுத்தி அவருடன் இல்லத்துக்கு சென்றபோது தான் பிரச்சனை புத்தகரணமாக வெடித்துள்ளது. நீ அந்த புதிய ஆண் நண்பனுடன் எத்தனை முறை உறவுகொண்டாய், எப்படியெல்லாம் உறவுகொண்டாய் என்று அருவருத்தக்க கேள்விகள் பலவற்றை கேட்டு துன்புறுத்தி இருமுறை அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பிய பெண் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த வழக்கில் பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் வழக்கை மற்றொரு நாளுக்கு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.

Related posts