TamilSaaga

“சிங்கப்பூரின் Westlite Jalan Tukang Dormitoryயை பார்வையிட்ட MOM அதிகாரி” : என்ன கூறினார்? – வீடியோ உள்ளே

சிங்கப்பூர் மனிதவள துரையின் உயரதிகாரியும் பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழுவின் தலைவருமான வெஸ்ட்லைட் ஜலான் துகாங், Dormitoryக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களுடன் பேசி, அவர்களின் கவலைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார். இதுகுறித்து மனிதவள அமைச்சகம் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் உள்ள வெஸ்ட்லைட் ஜலான் துகாங் தங்குமிடத்தில் பெருந்தொற்று வழக்குகளில் “எதிர்பாராத” அதிகரிப்பு ஏற்பட்ட நிலையில் தொற்று பாதித்த தொழிலாளர்களை பராமரிப்பு அல்லது மீட்பு விடுதிகளுக்கு மாற்றுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) ஜூரோங்கில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதிக்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் MOMன் (ACE) குழுமத்தின் தலைவர் துங் யுய் ஃபாய் பின்வருமாறு கூறினார் : “பெருந்தொற்று மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்பு மையங்களுக்கு மாற்றுவதில் ஏற்படும் தாமதங்கள், தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிக்கான அணுகல் இல்லாமை, வழங்கப்பட்ட உணவின் மோசமான தரம் பற்றிய கூற்றுக்களை MOM ஆராய்ந்துள்ளதாகவும். இவை தங்கும் விடுதியின் ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் முதலாளியுடன் சேர்ந்து “படிப்படியாக தீர்க்கப்பட்டு” வருவதாகவும் அவர் கூறினார்.

MOM வெளியிட்ட காணொளி

மேலும் அவர் பேசியபோது “எங்களுடைய ஆரம்பகட்ட விசாரணைகளில், தங்குமிடத்தில் இருந்து தகுந்த பராமரிப்பு அல்லது மீட்பு வசதிக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் தாமதமாக இருந்ததால், நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பாராத அதிகரிப்பை கண்டுள்ளதாக கூறினார்”. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் தரமில்லாமல் இருந்ததை பலர் சுட்டிக்காட்டிய நிலையில் sembcorp marine நிறுவனம் தனது தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 13 மாதங்களுக்கும் மேலாக தனிமையில் அடைபட்டு கிடைக்கும் தொழிலாளர்களுக்கு இது மற்றுமொரு இன்னலாக இருந்து வருகின்றது என்பது தொழிலாளர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஆன்டிஜென் விரைவு சோதனைகளில் (ஏஆர்டி) நேர்மறை சோதனை செய்த குடியிருப்பாளர்களின் பின்தங்கிய நிலை பராமரிப்பு அல்லது மீட்பு வசதிகளுக்கு எடுக்கப்பட்டுள்ளது, என்றார். தொழிலாளர்களின் பராமரிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய மொபைல் மருத்துவக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Related posts