TamilSaaga

சிங்கப்பூரில் போலீசாரை “அந்த” வார்த்தை சொல்லி திட்டிய பிரிட்டிஷ் நபருக்கு அபராதம் : ஏன் திட்டினார்?

சிங்கப்பூரில், 37 வயதான பிரிட்டிஷ் நாட்டவரான கேரி ஜோசப் பேட்ஸ் ஹாலண்ட் குடிபோதையில் ஒரு போலீஸ்காரர் மீது அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகித்ததற்காக 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி ஒன் வேர்ல்ட் இன்டர்நேஷனல் ஸ்கூலில் (OWIS) முன்னாள் ஆசிரியராக இருக்கும் ஹாலந்து, ஜூன் 26, 2020 அன்று ஜூரோங் பாயிண்டிற்கு வெளியே இந்த குற்றத்தைச் செய்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, சம்பவம் நடந்த அந்த நாள் அதிகாலை 1:36 மணிக்கு, “பிரச்சனை ஏற்படுத்தும்” வகையில் இரண்டு பேர் நடந்துகொள்வதாக போலீசாருக்கு அழைப்பு வந்தது. அதிகாலை 1:40 மணியளவில், ஜூராங் பாயிண்ட் ஷாப்பிங் சென்டரின் பழைய சாங் கீ கடையின் வெளியே உள்ள நடைபாதைக்கு இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு வந்தது. ஜுரோங் பாயிண்ட் பாதுகாப்பு அதிகாரிகள் ஹாலந்துடன் பேசிக்கொண்டிருந்தபோது போலீசார் அங்கு வந்தனர்.

போலீஸ் அதிகாரிகளின் முதல் குழு ஹாலந்தை நெருங்கியபோது, ​​அவர் அவர்களை பார்த்து சத்தமிட்டார், அவர்கள் அவரிடமிருந்து விலகி இருக்காவிட்டால் அவர்களை உதைப்பேன் என்று கூறியுள்ளார். அதிகாரிகள் அவருக்கு உதவி செய்யத் தான் வந்திருப்பதாக கூறினர். ஆனால் ஹாலந்து தொடர்ந்து விரோதமாகவே அவர்களிடம் எதிர்வினையாற்றியுள்ளார். இதனையடுத்து அதிகாரி ஒருவர் ஹாலண்டின் அடையாள அட்டையை ஸ்கிரீனிங் செய்யும் நோக்கங்களுக்காக கோரியபோது, ​​அவர் அந்த அதிகாரியிடம் “fck off, நீங்கள் காவல்துறையால் என்னை எதுவும் செய்ய முடியாது” என்பர் கூறி மீண்டும் “fck you” என்று அநாகரீகமாக சத்தமிட்டுள்ளார்.

அவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசியர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அதிகாரிகள் அவரிடம் அவரது முகமூடி எங்கே என்று கேட்டனர், அதற்கு ஹாலந்து அவருக்கு தெரியாது என்று பதிலளித்தார்.

Related posts