TamilSaaga

“சொற்ப பணத்தின் மேல் ஆசை” – சிங்கப்பூரில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிக்கொள்ளும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

வெளிநாட்டுக்கு சென்றுவந்தது யாராக இருந்தாலும், நிச்சயம் அவர்களிடம் இருந்து ஏதோ ஒன்றை நாம் நிச்சயம் எதிர்பார்ப்போம். குறிப்பாக வெளிநாட்டு வாசனை திரவியம், தின்பண்டங்கள், போன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்களும் தங்களுடைய சொந்தங்களுக்கென்று பல பொருட்களை வாங்கிச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் சரக்கு Liftஆல் வந்த சோதனை” : சாப்பிட போனது ஒரு குத்தமா? – 3 ஆண்களின் 30 நிமிட அனுபவம்

அதேபோலத்தான் சிங்கப்பூர் வந்து வேலைபார்த்துவிட்டு தாயகம் திரும்பும் பலர் தங்களுடைய சொந்தங்களுக்கு தங்கத்தை வாங்கிச்செல்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த தங்கத்தை சிங்கப்பூரில் வாங்கும்போதும் வெகு சிலர் சில குளறுபடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த குளறுபடியானது நகை வாங்குவதறகான GSTயில் தான் தொடங்குகிறது என்பதும் பலரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம்.

உதாரணமாக சிங்கப்பூரில் தங்க நகைகள் வாங்கும்பட்சத்தில் அதற்கான GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை சிங்கப்பூருக்கு விசிட்டிங் விசாவில் சென்றவர்களால் மட்டுமே Claim செய்ய முடியும். மாறாக சிங்கப்பூரில் தங்கி வேலைபார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்களால், தாங்கள் வாங்கும் தங்கத்திற்கான GST வரியை claim செய்துகொள்ள முடியாது.

சிக்கல் இந்த இடத்தில் தான் ஆரம்பிக்கிறது, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் நபர்களும் இந்த GST வரியை claim செய்வதற்காக சில ஏஜெண்டுகளை அணுகுகின்றனர். விசிட்டிங் விசாவில் உள்ள அந்த ஏஜெண்டுகள் அந்த நகையை வாங்கியதாக கணக்குக்காட்டி சிங்கப்பூர் அரசிடம் இருந்து GST வரியை பெற்று அதை அந்த வெளிநாட்டு ஊழியர்களுடன் பங்கிடுகின்றனர். சிங்கப்பூரில் 1000 டாலருக்கு தங்கம் வாங்கும்பட்சத்தில் 7 சதவிகிதம் GST என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு நடத்தும் சில அதிரடி சோதனையில் இந்த குற்றச்செயல் வெளிச்சத்திற்கு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பல வழக்குகள் சிங்கப்பூரில் பதிவான நிலையில் சிங்கப்பூர் அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியது. குறிப்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபாடும் வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்ப்போர்ட்களை அரசு பறிமுதல் செய்துவிடுகிறது (சிங்கப்பூர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு).

இதையும் படியுங்கள் : “உடலுறவு இன்பம் தருமா?” : சிங்கப்பூர் நடிகையிடம் ஓப்பனாக கேட்ட 10 வயது மகன்!

இதனால் சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக பல வெளிநாட்டு தொழிலாளர்கள் மாற்றிவிடுகின்றனர். வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் பட்சத்தில் அவர்களால் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகின்றது. வருடக்கணக்கில் வழக்கு நடக்க, ஒரு கட்டத்தில் கடுமையான விரக்திக்கு அந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஆளாகின்றனர். தற்கொலை முடிவுகளை எடுக்கும் அளவிற்கு கூட சிலர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சில நகை கடைக்காரர்கள் மற்றும் வெகு சில போலி ஏஜெண்டுகளை, சொற்ப பணத்திற்காக நம்பி ஏமாறும் அவலம் அண்மைக்காலமாக குறைந்து வருகின்றது என்றபோதும் தாயகத்தில் உள்ள சொந்தங்களுக்காக பல தியாகங்களோடு வெளிநாடுகளில் பணிபுரிவோர் இதுபோன்ற குறுக்கு வழிகளை நம்பாமல் நேர்வழியில் சென்று எல்லாவற்றையும் எதிர்நோக்கும் பட்சத்தில் சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி

Related posts