TamilSaaga

முதலில் மறுத்தேன்.. பிறகு கட்டாயத்தால் நிர்வாணமாக நடித்தேன் – பகீர் தகவலை வெளியிட்ட “பிசாசு 2” நாயகி ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்ற இடத்தை பெறவில்லை என்றபோது, பலர் நடிக்க தயங்கும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வல்லவர். 2005ம் ஆண்டு வெளியான “கண்ட நாள் முதல்” என்ற படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார்.

ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே அதே ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் என்ற படத்தில் வரும் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலம் பாடகியாக இவர் தமிழ் சினிமாவில் நுழைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று தொடங்கி இன்று வரை பல சிறப்பான கதாபாத்திரங்கள் ஏற்று தொடர்ச்சியாக நடித்து வருகின்றார் ஆண்ட்ரியா. இதுவரை 60க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள ஆண்ட்ரியா தான் அண்மையில் சமந்தாவின் கவர்ச்சியில் வெளியாகி அசத்திய “ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா” பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய நடிப்பில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் தான் பிசாசு 2. இந்த படத்தில் பேய் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள ஆண்ட்ரியா சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக நிர்வாணமாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

“அவர் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே நடக்குது”.. சிங்கப்பூரில் பண்டிகை நேரத்தில் பையை தொலைத்த ஓட்டுநர் – மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு

ஏற்கனவே வட சென்னை படத்தில் வரும் படகு கட்சி ஒன்றில் அவர் மேலே ஆடையில்லாமல் நடித்து பின் அந்த கட்சி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிசாசு படத்தில் அவர் முழுமையாக நிர்வாணமாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிசாசு 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று நாளை ஏப்ரல் 29ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகி ஆண்ட்ரியா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளதாக கூறபடுகிறது. முதலில் மிஸ்கின் இந்த படத்தில் நடிக்க என்னை அணுகி நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறியபோது முதலில் மறுத்ததாகவும்.

சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு நடந்த கொடூர விபத்து – எத்தனை கோடி கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வராது!

பின் கதைக்கு இது அவசியம் என்று கருதியதாலும், இயக்குனரின் கட்டாயத்தாலும் தான் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன் என்று ஆண்ட்ரியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி பிசாசு படம் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் பிசாசு 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts