அண்டை நாடான மலேசியாவில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிக்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான மலேசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மலேசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு 14 நாட்களுக்கு கடுமையாகப்படுகிறது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார். நாளை ஜூலை 3ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். மேலும் இம்மாதம் 16ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் வசித்து வருபவர்கள் குடும்பங்களில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து உணவுகளும் கடைகளும் இரவு 8 மணியுடன் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மைகாலமாக சிலாங்கூர் பகுதியில் தொற்று எண்ணிக்கை 1,800 கடந்தே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோலாலம்பூரில் அதன் எண்ணிக்கை 600 லிருந்து 1000 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது