TamilSaaga

சிங்கப்பூரில் கெத்து சம்பளம் தரும் SPass… இந்த பாஸில் வேலை கிடைக்க கண்டிப்பா இந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கணும்… மிஸ் பண்ணிடாதீங்க!

வெளிநாட்டில் வேலை செய்தால் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என பலரும் நினைப்பது இன்று வரை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சிங்கப்பூர் விமான நிலையத்தில் தங்கள் வாழ்க்கை மாறி விடும் என்ற ஆசையில் பல நூறு பேர் வந்து இறங்கி வருகின்றனர். அவர்களுக்கு சிங்கப்பூர் வேலை மட்டும் கொடுக்காமல் பாதுகாப்பு உணர்வுடன் சொந்த நாட்டு அனுபவத்தையுமே கொடுப்பது வாடிக்கையாகி வருகிறது.

வேலைக்காக பல வகையான பாஸ்கள் இருந்து வருகிறது. இந்த வொர்க் பாஸ் படிக்காதவர்கள் தொடங்கி படித்தவர்கள் வரை வித்தியாசமான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தினை அள்ளி கொடுக்கும் பாஸ்கள் கூட சிங்கப்பூரில் இருக்கிறது. இதில் ஒரு டிகிரி அல்லது டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கும் பாஸ் தான் SPass.

இதையும் படிங்க: Skill அடிக்க இன்ஸ்டியூட் போறீங்களா… Aluminum Formwork பயிற்சி முதல் டெஸ்ட் வரை எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு இருக்கும்?

இந்த பாஸில் சிங்கப்பூர் வர நினைப்பவர்கள் நல்ல ஏஜெண்ட்டினை பிடித்து அவர்களிடம் உங்கள் கல்வி தகுதி பற்றி கூறி அதற்கேற்ப வேலை தேட கூறுங்கள். அவர் தன்னுடைய சிங்கப்பூர் ஏஜெண்ட் மூலமாக உங்களுக்கு வேலை தேடிக் கொடுப்பார். தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூருக்கு SPassல் செல்ல 4 முதல் 5 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இது அனைத்துமே ஏஜென்ட்டுகளுக்கு தானே தவிர சிங்கப்பூர் மனிதவளத்துறை கட்டணம் என ஊழியரிடம் இருந்து எதையுமே வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SPass செல்ல ஆசைப்படும் நீங்கள் முதலில் இந்த டாக்குமெண்ட்ஸினை மிஸ் செய்யாமல் வைத்துக்கொள்ளுங்கள்.

  • பாஸ்போர்ட்
  • கல்வி சான்றிதழ்கள்
  • background screening நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட சரிபார்ப்பு ஆவணம்
  • கல்லூரியில் இருந்து வாங்கப்பட்ட அனைத்து செமஸ்டருக்கான மார்க்‌ஷீட்
  • ஆங்கிலத்தில் இல்லாத சான்றிதழுடன் translation செய்யப்பட்ட ஆவணமும் சேர்க்கப்பட வேண்டும். இந்த translationஐ இதற்கான சர்வீஸ் வழங்குபவர்களிடம் இருந்து மட்டுமே செய்ய வேண்டும்.
  • notary யிடம் வாங்கிய எந்த ஆவணமும் செல்லாது

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல Skill டெஸ்ட் அடிக்க போறீங்களா? தமிழ்நாட்டில் BCA அப்ரூவ் செய்த இன்ஸ்ட்டியூட் வெறும் இரண்டு தானா? இத தெரிஞ்சிக்காம அட்மிஷன் போடாதீங்க

SPass அப்ளே செய்ய இந்த ஆவணங்கள் தான் பொதுவாக கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உங்களிடம் இருந்து விவரம் தேவைப்படும் போது அதற்கேப மேலும் சில ஆவணங்கள் எதுவும் கேட்கப்படலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts