TamilSaaga

சிங்கப்பூரில் இந்த வேலைக்கு தான் demandஆ… இந்த டிகிரி படிச்சிருந்தா செம வாழ்க்கை வெயிட்டிங்… சம்பளம் எல்லாமே 3000 வெள்ளிக்கு மேல தானாம்

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஆசை யாருக்கு தான் இருக்காது. ஆனால் எந்த வேலைக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற குழப்பம் இருக்கும். இந்த டிகிரிக்கு இருக்குமா இல்லை இருக்காது என சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கும் இருந்தால், சிங்கப்பூரில் ரொம்பவே Demandஆ இருக்கும் இந்த வேலைக்கான லிஸ்ட்டினை கொடுங்க சூப்பர் ஹேப்பி ஆகிடுவாங்க.

Clinical specialist:

Clinical specialist என்பது மருத்துவத் துறையில் இருக்கும் வேலை. இவர்களின் முதன்மைப் பொறுப்பு குறிப்பிட்ட மருத்துவ சாதனங்களைப் பராமரித்தல் மற்றும் அவற்றை ஹெல்த் கேர் ப்ரோவைடர்களுக்கு விற்பனை செய்வது தான். இவர்களுக்கு சிங்கப்பூரில் அடிப்படை சம்பளமாக $4000 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிறைய டிப்ளமோ படிப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க என்ன செய்யலாம்… இந்த டாக்குமெண்ட் இருந்தால் போதும்! 3 நாளில் முடித்து விடலாமாம்

Accountant:

அக்கவுண்ட்ஸ் படித்தவர்களுக்கு சிங்கப்பூரிலும் செம demand தான். இந்த படிப்பு இருப்பவர்களுக்கு நிறைய துறைகளில் வேலை இருக்கும் என்பதால் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் அமையும். இந்த வேலைகளில் இருப்பவர்களுக்கும் அடிப்படையாக 4000 சிங்கப்பூர் டாலர் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Copywriter:

Copywriter என்பவர் மார்க்கெட்டிங் அல்லது கல்வி போன்ற பல்வேறு துறைகளில் content எழுதி தருபவர்கள். copywriter மார்க்கெட்டிங் பொருட்களை உருவாக்க மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு துறைகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த வேலைக்கு நல்ல மொழி அறிவு இருந்தாலே போதுமானது. சம்பளமாக மாதம் $3700 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல Skill டெஸ்ட் அடிக்க போறீங்களா? தமிழ்நாட்டில் BCA அப்ரூவ் செய்த இன்ஸ்ட்டியூட் வெறும் இரண்டு தானா? இத தெரிஞ்சிக்காம அட்மிஷன் போடாதீங்க

Administrative specialist:

Administrative specialist என்பவர் பல்வேறு நிர்வாக மற்றும் தனிப்பட்ட உதவியாளர் பணிகள் செய்பவர். ஆராய்ச்சி செய்யலாம், அறிக்கைகளைத் தயாரிக்கலாம், கடிதங்களை ஒழுங்குப்படுத்தலாம், மீட்டிங்கினை திட்டமிடலாம், அட்டவணைகள் மற்றும் காலெண்டர்களைப் பராமரிக்கலாம் மற்றும் பயண ஏற்பாடுகளைச் செய்யலாம். இந்த வேலைக்கு சம்பளமாக 3500 சிங்கப்பூர் டாலரில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Digital marketer:

சிங்கப்பூரில் அதிகம் பேரை தொடர்ந்து வேலைக்கு எடுத்து வரும் துறைகளில் Digital marketerம் ஒன்று. மின்னஞ்சல், சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் search engine optimisation போன்ற பல்வேறு சேனல்கள் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸ் தயாரிப்புகள் அல்லது சர்வீஸினை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த வேலைக்கு அடிப்படை சம்பளமாக 3500 சிங்கப்பூர் டாலரில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Human resources:

மனித வள நிபுணர் என்பது ஒரு நிறுவனத்தின் மனித வள செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒரு நிபுணர். பணியாளர் பதிவுகளை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் பல நிபுணர்களை மனித வள துறைகள் கொண்டிருக்கலாம். ஒரு மனித வள நிபுணர் ஊழியர்களை பணியமர்த்துவார்கள். இந்த வேலைக்கும் சிங்கப்பூரில் அதிகப்பட்ச demand கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைக்கு அடிப்படை சம்பளமாக 3000 சிங்கப்பூர் டாலரில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Sales executive:

Sales executive என்பவர்கள் ஒரு தொழிலின் பொருளை பிரபலப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவனித்து அவர்கள் தேவைப்படுபவை செய்து கொடுப்பவர். Sales executive புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் அதிகபட்சமாக 3000 சிங்கப்பூர் டாலரில் இருந்து சம்பளம் தரப்படுகிறது.

Teacher:

Teacherகளுக்கும் சிங்கப்பூரில் ஏகப்பட்ட demand தான். நீங்கள் எந்த பிரிவில் படித்திருந்தாலும் கண்டிப்பாக சிங்கப்பூரில் உங்களால் நல்ல வேலையை பார்த்து விட முடியும். இதற்கு அதிகபட்சமாக 3000 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் தரப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts