TamilSaaga

உலக நாயகன் நடிப்பில் உருவாகும் “விக்ரம்” – மக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம்?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் “விக்ரம்”. 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் அவர்களுடைய இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக ஆரம்பத்தில் கருதப்பட்டாலும் அந்த படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் கதைக்களம் நகரும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியாக இருக்கும் விக்ரம் படத்தின் தயாரிப்பு பணிகள் கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் கவனித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் கமல் அவர்களுடன் நடிக்க பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்சேதுபதி மட்டுமல்லாமல் பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் கடந்த சில வருடங்களாக திரையுலகை கலக்கிவரும் காளிதாஸ் ஜெயராம் என ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுடன் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி அவர்களும் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்த தகவலை இன்னும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts