சிங்கப்பூரில் உள்ள டேட்டிங் செயலியான Grindr-ல் தான் சந்தித்த 12 வயது சிறுவனுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக 54 வயது நபருக்கு நேற்று திங்கள்கிழமை (பிப்ரவரி 21) இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Ng Tuan Loo, என்ற அந்த ஹாக்கர் ஸ்டால் உதவியாளர், குற்றம் நடந்த நேரத்தில் சிறுவனை விட கிட்டத்தட்ட 40 வயது மூத்தவர் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் மூன்று வெவ்வேறு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சிறுவனின் வளர்ப்பு தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
மைனர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக ஊடுருவியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை Ng ஒப்புக்கொண்டார். மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் அவரின் தண்டனையின்போது கருத்தில் கொள்ளப்பட்டன. டிசம்பர் 2019 அல்லது ஜனவரி 2020ல் Grindrல் இரண்டாம் நிலை 1 மாணவருடன் Ng நட்பு கொண்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் இரண்டு டேட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் கணக்கை உருவாக்க தன்னுடைய வயது 18 என்று தவறுதலாக அளித்து கணக்கை திறந்துள்ளார். ஆனால் அவர் அந்த செயலிகளில் உள்ள தனது Profileல் வயது 13 என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் Grindrல் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் Ngக்கு அறிமுகமாகி பின் WhatsAppல் பேசத்துவங்கியுள்ளனர். நான் உன்னை பார்த்துகொள்ள்கிறேன், மற்றும் உனக்கு பணம் தருகிறேன் என்று Ng அந்த சிறுவனிடம் கூறியுள்ளார். 2020 ஜனவரி 16 மற்றும் ஜனவரி 28க்கு இடையில், Ng பாதிக்கப்பட்டவரை மூன்று முறை சந்தித்து அதில் ஒரு சந்தர்ப்பத்தில் பாலியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த சிறுவனை பாலியல் ரீதியாக அணுகும்போதெல்லாம் அவனுக்கு பணம் கொடுத்துள்ளார் Ng. இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் நடக்க பிப்ரவரி 5, 2020 அன்று, பாதிக்கப்பட்டவரின் வளர்ப்பு தந்தை அவனது தொலைபேசியைச் பார்த்து அதிர்ந்துபோய் விசாரித்த நிலையில், மூன்று ஆண்களுடன் “உடல் தொடர்பு” வைத்திருப்பதை சிறுவன் ஒப்புக்கொண்டான்.
இறுதியில் அவன் தாயுடன் கலந்தாலோசித்து போலீசில் புகார் செய்துள்ளார், Ngக்கு குறைந்தபட்சம் 32 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் ஜி. கண்ணன் கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்ட சிறுவனுடன் உடலுறவு கொண்ட மற்ற இருவருக்கு முறையே 32 மாதங்கள் மற்றும் 32 மாதங்கள் மற்றும் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கு வந்த புதிய MRT ரயில்கள் – கப்பலில் வந்திறங்கிய அழகு இருக்கே.. அட.. அட.. அட
Ng பாதிக்கப்பட்டவரை விட கிட்டத்தட்ட 40 வயது மூத்தவர் என்று திரு கண்ணன் கூறினார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக வாதாடி Ng உள்ளிட்ட மூன்று பேருக்கும் சரியான தண்டனையை வாங்கிக்கொடுத்துள்ளார் வழக்கறிஞர் கண்ணன்.