SINGAPORE: நன்யாங் (Nanyang) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) 2,000 சிங்கப்பூர் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள கணினி உபகரணங்களையும், பொருட்களையும் ஐடி ஊழியர் ஒருவர் திருடியிருக்கிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், இவரே NTU-வின் முன்னாள் மாணவர் தான். வயது 31. பெயர் துங் சி கிட். மொத்தம் 3 வித திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2019 டிசம்பர் முதல் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்.
கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருட்டுத்தனமாக பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள அறை ஒன்றுக்குள் இவர் நுழைந்திருக்கிறார். இரவு 11.30 மணியளவில், ஒரு மேஜையில் ஏறி நின்று, சுமார் S$1,000 மதிப்புள்ள இணைய வயர்லெஸ் சாதனங்களை திருடியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, 10 டாலர்கள் மதிப்புள்ள wet wipes-கள், 8 டாலர்கள் மதிப்புள்ள hand sanitiser-கள் என்று கண்ணில் தோன்றியதையெல்லாம் திருடியிருக்கிறார்.
மேலும், மொத்தம் S$900 மதிப்புள்ள மூன்று கம்ப்யூட்டர் மானிட்டர்களையும், மற்றொரு இரண்டு வயர்லெஸ் சாதனங்களையும் டிசம்பர் 2019 மற்றும் பிப்ரவரி 2021-க்கு இடைப்பட்ட காலங்களில் திருடியிருக்கிறார். இப்போது அவரிடமிருந்து அனைத்து உபகரணங்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த குற்றங்கள் அனைத்தையும் துங் சி கிட் ஒப்புக் கொண்டுள்ளார். சிக்கிக் கொண்டோம் என்பதை அறிந்த துங் உஷாராக, தான் Institute of Mental Health-ல் மனநல சிகிச்சை பெற்று வருவதாக தனது வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும், அவர் ஏப்ரல் மாதம் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் IT இன்ஜினியர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. மற்ற துறைகளில் ஊழியர்களை விட இவர் அதிக அளவில் சம்பளம் பெறுகின்றனர். அதாவது Software போல System Administrators-களும் நல்ல சம்பளம் வாங்குகின்றனர். அப்படி இருந்தும், சானிடைசரை கூட விட்டுவைக்காமல் துங் சி கிட் திருடியிருக்கிறார். (அவருக்கு தன யுனிவர்சிட்டி மேல என்ன கோவமோ!!)