TamilSaaga

‘வணிகக்கப்பலில் சிக்கிய இருவர்’ – விரைந்து சென்று காப்பாற்றிய சிங்கப்பூரில் RSAF

சிங்கப்பூர் கடல் பகுதியில் இருந்த வர்த்தக கப்பலில் இருந்து ஒரு குழு உறுப்பினர் கடந்த ஜூலை 19ம் தேதி அன்று சிங்கப்பூர் விமானப்படை வீரர்களால் மீட்கப்பட்டார். சிங்கப்பூர் கடற்கரையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் கப்பலில் இருந்த குழு உறுப்பினர், திடீர் நினைவாற்றல் இழப்பை சந்தித்து வருவதாக RSAF தெரிவித்துள்ளது.

அடுத்த நாள், ஹரி ராயா ஹாஜி விடுமுறையில், RSAF தேடல் மற்றும் மீட்புக் குழு, சிங்கப்பூர் கடற்கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் மற்றொரு வணிகக் கப்பலில் வந்த இரண்டாவது குழு உறுப்பினரை காப்பாற்றினார்.

அந்த குழு உறுப்பினர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டதாக RSAF தெரிவித்தது. மேலும் மீட்கப்பட்ட அந்த இரண்டு பேரும் உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சுயநினைவு மற்றும் நிலையான உடல் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மீட்பின் இரண்டு புகைப்படங்களை RSAF தனது முகநூலில் வெளியிட்டது.

“RSAF விமானக் குழுவினர், தரைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் குழு 24 மணிநேரமும் காத்திருப்புடன் உள்ளது என்றும், எப்போது வேண்டுமானாலும் உயிர் காக்கும் பணிகளுக்கு விரைவாக பதிலளிக்கும்” என்றும் RSAF வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts